தங்க நகைகளை சேதப்படுத்தாமல் சுத்தம் செய்வது எப்படி? ஈசி டிப்ஸ்!

பணம் ஏதும் செலவழிக்காமல் வீட்டிலேயே உங்களது பழைய தங்க நகைகளைப் புதியது போல ஜொலிக்க வைக்க முடியும். அது எப்படி செய்யலாம் என்று இந்தப் பதிவில் காணலாம்.

பணம் ஏதும் செலவழிக்காமல் வீட்டிலேயே உங்களது பழைய தங்க நகைகளைப் புதியது போல ஜொலிக்க வைக்க முடியும். அது எப்படி செய்யலாம் என்று இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Gold buying investment

தங்க நகைகளை சேதப்படுத்தாமல் சுத்தம் செய்வது எப்படி? ஈசி டிப்ஸ்!

பெண்களுக்கு தங்க நகைகளின் மீது எப்போதுமே ஆசை அதிகமாகவே இருக்கும். அதனால் அவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல விதமான டிசைன்களில் நகைகளை வாங்கி குவிக்கிறார்கள். ஆனால் தற்போது தங்கத்தின் விலை வாங்க முடியாத அளவில் அதிகரித்துள்ளது. எனவே வீட்டில் இருக்கும் பழைய தங்க நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். தங்க நகைகளை அடிக்கடி அணியும் போது அவற்றில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தங்கி தங்கத்தின் நிறத்தை மங்கச் செய்து விடும். மங்கிய நகைகளை சிலர் தங்க நகையில் கொடுத்து பாலிஷ் செய்வார்கள். ஆனால் அப்படி செய்யும்போது அதிலிருந்து சிறிதளவு தங்கம் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளன. மேலும் செலவும் அதிகம். இந்நிலையில், பணம் ஏதும் செலவழிக்காமல் வீட்டிலே உங்களது பழைய தங்க நகைகளை புதியது போல ஜொலிக்க வைக்க முடியும். அது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

Advertisment

டிப்ஸ்:1

அரை பழுத்த தக்காளியை கால் பகுதியாக வெட்டி அதில் உள்ள விதைகளை நீக்கி அதன் மீது சிறிதளவு உப்பு தூவி, தங்க நகைகள் மீது மெதுவாக தேய்க்கவும். பிறகு சுத்தமான நீரில் நகைகளை கழுவி மென்மையான பருத்தித் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைக்க வேண்டும். 

டிப்ஸ்:2

ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் சூடான நீரை ஊற்றி அதில் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து அதில் தங்க நகைகளை சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு பிரஷ் கொண்டு மெதுவாக சுத்தம் செய்தால் உள்ளே இருக்கும் அழுக்கு நீங்கிவிடும். சூடான நீரில் நகைகளை நனைத்து அதில் சிறிதளவு டூத் பேஸ்ட் தடவி பிரஷ் கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் நகைகள் மீது இருக்கும் அழுக்கு நீங்கி, மீண்டும் பளபளக்கும்.

முக்கிய குறிப்பு: தங்க நகைகளை அணிந்து கொண்டு வெயிலில் அதிக நேரம் இருக்க வேண்டாம். பிற நகைகளுடன் சேர்த்து தங்க நகைகளை ஒருபோதும் வைக்க வேண்டாம். தங்க நகைகளை அணிந்து குளிக்க வேண்டாம். ஈரமான இடங்களில் தங்க நகைகளை வைக்க வேண்டாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: