கம்பளி பூச்சி தொல்லையா? வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதும்; டிரை பண்ணுங்க!
வீட்டு தோட்டத்தில் இருக்கும் கம்பளி பூச்சிகளை எவ்வாறு விரட்டுவது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். பெரும்பாலும், வீட்டில் இருக்கும் முருங்கை மரங்களுக்கு அதிகப்படியான கம்பளி பூச்சிகள் வரும்.
வீட்டு தோட்டத்தில் இருக்கும் கம்பளி பூச்சிகளை எவ்வாறு விரட்டுவது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். பெரும்பாலும், வீட்டில் இருக்கும் முருங்கை மரங்களுக்கு அதிகப்படியான கம்பளி பூச்சிகள் வரும்.
வீட்டில் தோட்டம் அமைத்து பராமரிப்பவர்களுக்கு கம்பளி பூச்சிகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். இவை வேகமாக பரவி செடிகளில் இருக்கும் இலைகளை முற்றிலும் சாப்பிட்டு விடும். இது தவிர கம்பளி பூச்சிகள் நம் மீது பட்டால், அதிகப்படியான அரிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, கம்பளி பூச்சிகளை எப்படி விரட்டுவது என்று இதில் காணலாம்.
Advertisment
பெரும்பாலும், கம்பளி பூச்சிகளால் பாதிக்கப்பட்ட செடிகளை தனியாக பிரித்து எடுப்பது நல்லது. ஏனெனில், இவை சீக்கிரமாக மற்ற செடி அல்லது மரங்களுக்கு பரவுவதை தடுக்க முடியும். இதன் தொடர்ச்சியாக, ஒரு திரவத்தை தயாரித்து கம்பளிப் பூச்சிகளை விரட்ட முடியும்.
இதற்காக அரை பக்கெட் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், துணி துவைக்க பயன்படும் சோப்பு பௌடர் ஒரு ஸ்பூன் சேர்த்துக் நன்றாக கலக்க வேண்டும். இந்த நீர் முழுவதும் நுரை வரும் அளவிற்கு கரைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இவ்வாறு செய்தால் கம்பளி பூச்சிகளை விரட்டுவதற்கான பூச்சிக் கொல்லி தயாராகி விடும். இந்த தண்ணீரை கம்பளி பூச்சி இருக்கும் செடியின் அனைத்து இடங்களிலும் தெளித்து விடலாம். இவ்வாறு முதல் முறை தெளிக்கும் போதே அனைத்து கம்பளி பூச்சிகளும் பெரும்பாலும் செத்து விடும். எனினும், சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை இந்த தண்ணீரை தெளிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
எனவே, தோட்டத்தில் இருக்கு கம்பளி பூச்சிகளை விரட்ட விலை உயர்ந்த மற்ற பூச்சிக் கொல்லிகள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் சோப்பு பௌடர் மற்றும் தண்ணீர் மட்டும் வைத்து இவற்றை விரட்டி விடலாம்.