Advertisment

சர்க்கரை நோய் வராமல் இருக்க முன்னோர்களின் மருத்துவம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to control diabetes in easy way - சர்க்கரை நோய் வராமல் இருக்க முன்னோர்களின் மருத்துவம்

how to control diabetes in easy way - சர்க்கரை நோய் வராமல் இருக்க முன்னோர்களின் மருத்துவம்

சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாவிட்டாலும் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

Advertisment

இந்நிலையில், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் அளவை மேம்படுத்தவும் ஆயுர்வேதத்தில் உதவும் சில வழிகள் உள்ளன.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஓர் சிறப்பான காய் தான் சுரைக்காய். சர்க்கரை நோய் இருப்பவர்கள் சுரைக்காயை சாப்பிட்டால் அல்லது சுரைக்காய் ஜூஸ் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

மேலும் சுரைக்காயில் 92 சதவீதம் நீர்ச்சத்து மற்றும் 8 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ஆனால் இதில் கார்போஹைட்ரேட் இல்லை. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகிறது.

சுரைக்காய் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சுரைக்காயை சாப்பிட வேண்டும்.

ஆய்வு

இந்தியாவில் உட்கொள்ளும் (13) காய்கறிகளில் காணப்படும் நொதிகள் வகை 2 நீரிழிவு மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவுவதாக 2013 ஆம் ஆண்டு இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (IICT) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

முள்ளங்கி

இந்த ஆய்வில் முள்ளங்கியும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுவது கண்டறியப்பட்டுள்ளது. முள்ளங்கிக்கு அடுத்தப்படியாக சுரைக்காய் தான் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆய்வில் சுரைக்காயில் உள்ள புரோட்டீனான தைரோசின் பாஸ்படேஸ்-1 நொதி, உடலில் சரியான இன்சுலின் அளவைப் பராமரிக்கவும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகின்றது.

எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ம் உதவுசுரைக்காயை சாப்பிடும் சில வழிகளைக் காண்போம்.

வழி -01

சுரைக்காயை சாப்பிட சிறந்த வழி கிரேவி தயாரிப்பது தான். ஆனால் இதில் கிரேவி தயாரிக்கும் போது, அதில் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை அதிகம் சேர்க்க கூடாது.

வழி - 02

சுரைக்காயை தயிருடன் சேர்த்து உண்ணலாம். சுரைக்காய் ரெய்தா இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, செரிமானத்திற்கும் உதவுகின்றது.

வழி -03

தினமும் காலையில் ஒரு டம்ளர் சுரைக்காய் ஜூஸைக் குடியுங்கள். அதுவும் காலை உணவின் போது சுரைக்காய் ஜூஸை எடுக்க வேண்டும். இதனால் இரத்த சர்க்கரை அளவு வேகமாக குறையும்.

வழி -04

சுரைக்காயை வேக வைத்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் இதர நற்பதமான காய்கறிகளையும் சேர்த்து சாலட் வடிவில் சாப்பிடுவது சிறப்பான வழி.

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment