செடிகளில் அஸ்வினி பூச்சி, எறும்பு தொல்லையா? பூண்டு கரைசலை இப்படி தெளிங்க!
வீட்டின் தோட்டத்தில் இருக்கும் செடிகளில் அஸ்வினி பூச்சி, எறும்பு ஆகியவை அதிகமாக வரும் போது, அவற்றை பூண்டு கரைசல் கொண்டு எப்படி கட்டுப்படுத்தலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
வீட்டின் தோட்டத்தில் இருக்கும் செடிகளில் அஸ்வினி பூச்சி, எறும்பு ஆகியவை அதிகமாக வரும் போது, அவற்றை பூண்டு கரைசல் கொண்டு எப்படி கட்டுப்படுத்தலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
வீட்டில் இருக்கும் தோட்டத்தில் காய்கறிகள் பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், இந்தச் செடிகளில் அஸ்வினி பூச்சிகள் மற்றும் எறும்புகள் தொல்லை அதிகமாக இருக்கும்.
Advertisment
இந்த வகையான பூச்சிகள் பெரும்பாலும் செடியின் சாறை உறிந்து உயிர் வாழும். இதனால், செடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, இந்த பூச்சிகளை கூடுமானவரை விரைவாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
அந்த வகையில் செயற்கையான பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையை பின்பற்றி எப்படி இவற்றை கட்டுப்படுத்தலாம் என்று காணலாம். இதற்காக ஒரு பூண்டை எடுத்து தோலுடன் சேர்த்து நன்றாக நசுக்க வேண்டும். இதனை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, நிழலான இடத்தில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு அப்படியே வைத்து விட வேண்டும்.
நான்கு நாட்களுக்கு பின்னர், இதில் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் மற்றும் ஷம்பூ சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். ஷம்பூவிற்கு பதிலாக ஹேண்ட் வாஷும் கலக்கலாம். அதன் பின்னர், இதன் நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இப்படி செய்தால் நமக்கு தேவையான பூண்டு கரைசல் தயாராகி விடும்.
Advertisment
Advertisements
இதனை அஸ்வினி பூச்சிகள் இருக்கும் செடிகளில் தெளித்து விட வேண்டும். குறிப்பாக, இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும். இப்படி செய்தால் அஸ்வினி பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.