செம்பருத்தி செடியை அச்சுறுத்தும் மாவு பூச்சி… சோப்பு கரைசல் உடன் இதை சேர்த்து தெளிங்க!
தோட்டத்தில் இருக்கக் கூடிய மாவுப் பூச்சிகளின் தொல்லையை எவ்வாறு போக்குவது என்பதற்கான தீர்வை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை பின்பற்றுவதற்கு சுலபமாக இருப்பதால் எளிமையாக செய்ய முடியும்.
செம்பருத்திச் செடிகள், தக்காளி மற்றும் கத்தரிக்காய் செடிகள் ஆகியவற்றை பராமரிப்பவர்களுக்கு நிச்சயம் மாவுப் பூச்சிகள் குறித்து தெரிந்திருக்கும். இந்தப் பூச்சிகளின் தொல்லையை எவ்வாறு கட்டுப்படுத்தி தீர்வு காண்பது என பார்க்கலாம்.
Advertisment
மாவுப் பூச்சிகள் இருக்கும் இடத்தில் எறும்புகள் அதிகமாக இருக்கும். ஏனெனில், இந்த பூச்சிகளில் இருந்து வெளியேறும் திரவத்தை உட்கொள்வதற்காக எறும்புகள் வரும். இத்தகைய எறும்புகள் மூலமாக மாவுப் பூச்சிகள் செடி முழுவதும் பரவுகின்றன.
அந்த வகையில் பூச்சித் தாக்குதல், செடியின் எந்த இடத்தில் மிக அதிகமாக இருக்கிறதோ, அப்பகுதியை விரைவாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பூச்சித் தாக்குதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க முடியும்.
இதையடுத்து, துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பில் இருந்து சிறிதளவை வெட்டி எடுத்து தண்ணீருடன் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் கொஞ்சமாக சானிடைசரும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் மாற்றிக் கொள்ளலாம். இப்போது, செடியின் எந்தப் பகுதியில் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கிறதோ, அங்கு இதனை ஸ்ப்ரே செய்ய வேண்டும். இது போன்று பூச்சிகள் அதிகமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் தெளிக்கலாம்.
இப்படி செய்தால் சுமார் 24 மணி நேரத்திலேயே மாவுப் பூச்சி பரவலை கட்டுப்படுத்தலாம். செடிகளை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.