வீட்டுல டேபிள் ஃபேன் இருக்கா? ஏ.சி மாதிரி இப்படி ரெடி பண்ணுங்க; ஜில் ஜில்லுன்னு காத்து வரும்!
வீட்டில் இருக்கும் டேபிள் ஃபேனை எப்படி ஏ.சி போன்று மாற்றலாம் என இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு சுலபமாக இருப்பதால் எல்லோரும் எளிதாக பின்பற்ற முடியும்.
வீட்டில் இருக்கும் டேபிள் ஃபேனை எப்படி ஏ.சி போன்று மாற்றலாம் என இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு சுலபமாக இருப்பதால் எல்லோரும் எளிதாக பின்பற்ற முடியும்.
கோடை வெயில் எல்லோரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வெளியே சென்றால் அனல் அடிக்கிறது என்று நினைக்கும் போது, வீட்டில் இருந்தால் கூட அதன் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இப்படி இருக்கும் போது அனைவரது வீட்டிலும் ஏ.சி வாங்குவது சாத்தியம் கிடையாது. அந்த வகையில், டேபிள் ஃபேன் மூலமாக எப்படி குளிர்ச்சியான காற்றை வர வைக்கலாம் என்று காணலாம்.
Advertisment
இதற்கு சில பொருட்கள் நமக்கு தேவைப்படும். அந்த வகையில், 1:1 அளவில் தெர்மாகோல் பாக்ஸ், வாஷிங் மெஷினின் பின்புறத்தில் உபயோகப்படுத்தும் பி.வி.சி ஸ்ப்ரிங் ஹோஸ் பைப் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது, பைப்பின் வாய்ப்பகுதி இருக்கும் அலகத்திற்கு தெர்மாகோல் பாக்ஸின் மேற்புறத்தில் வெட்டி எடுத்து, அந்தப் பைப்பை அதில் வைக்க வேண்டும்.
இதேபோல், பழைய பிளாஸ்டிக் கூல்டிரிங் பாட்டிலின் மேற்பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பாட்டிலின் மேற்பகுதியை, பைப்பின் ஒரு பகுதிக்குள் செலுத்தி டேப் போட்டு ஒட்ட வேண்டும். இனி பாட்டிலின் கீழ்ப்பகுதியை சுற்றிலும் 5 இடங்களில் துவாரமிட வேண்டும்.
இப்போது, பைப்பின் மற்றொரு பகுதியை தெர்மாகோல் பாக்ஸில் துவாரமிட்ட இடத்தில் வைத்து ஒட்ட வேண்டும். சுமார் 1 மணி நேரத்தில் இது முற்றிலும் காய்ந்து விடும். இதையடுத்து, பாட்டிலின் இரு பகுதியையும், டேபிள் ஃபேனின் இரண்டு பக்கங்களிலும் இறுக்கமாக கட்ட வேண்டும்.
Advertisment
Advertisements
இறுதியாக, நிறைய ஐஸ் கட்டிகளை தெர்மாகோல் பாக்ஸியில் போட வேண்டும். இனி டேபிள் ஃபேனை ஆன் செய்தால் ஏ.சி போன்று குளிர்ச்சியாக இருக்கும். வீட்டில் ஏ.சி இல்லாதவர்கள் இதனை பயன்படுத்தலாம்.