Soft Idli: நீங்கள் சாஃப்ட்டான இட்லி செய்ய வேண்டும், அதிலும், இட்லி துணியுடன் போராடாமல் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால், சாஃப்ட் இட்லிக்கு இதை ஃபாலோ பண்ணுங்க. இந்த தகவல் உங்களுக்குத்தான்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்றால் அது இட்லிதான். பலரும் சாஃப்ட் இட்லி செய்வதற்கு மெனக்கெடுகிறார்கள். இட்லி செய்வது ஒரு பக்கம் என்றால், இட்லி பாத்திரத்தில் ஒட்டாமல் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் இட்லி துணியை தினமும் துவைத்து காய வைத்து அதை பராமரிப்பது ஒரு பெரிய வேலையாக சிரமப்படுகிறார்கள். உண்மையில் அது பெரிய வேலைதான். ஏனென்றால், தினமும் இட்லி செய்ய இட்லி துணியை துவைத்து அலசி அதை பராமரிப்பது என்பது பெரிய வேலைதான். நீங்களும் சாஃப்ட்டான இட்லி செய்ய வேண்டும், அதிலும், இட்லி துணியுடன் போராடாமல் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்த தகவல் உங்களுக்குத்தான்.
முதலில் இட்லிக்கு மாவு அரைப்பதில் சரியான அளவு அரிசியையும் உளுத்தம் பருப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றாக குண்டுகுண்டான அரிசியை 3 டம்ப்ளர் எடுத்துக்கொள்ளுங்கள். அதே டம்ப்ளரில் 1 டம்ளர் புதிய உளுத்தம் பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். பழைய உளுத்தம் பருப்பு என்றால், மாவு ஆகாது, இட்லியும் வெள்ளையாக வராது. அதனால், புதிய உளுத்தம் பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு, அரிசியையும் உளுத்தம் பருப்பையும் 2 - 3 முறை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். இதையடுத்து, அரிசியையும் உளுத்தம் பருப்பையும் 4 மணி நேரத்துக்கு நன்றாக ஊர வையுங்கள்.
4 மணி நேரத்துக்குப் பிறகு, அரிசியை தனியாகவும் உளுத்தம் பருப்பைத் தனியாகவும் மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, அரிசி மாவையும் உளுந்த மாவையும் சேர்த்து கரைக்க வேண்டும். பின்னர், இரண்டு மாவமாவைப் புளிக்க வைக்க வேண்டும். அதற்கு, ஒரு அரை டீஸ்பூண் கல் உப்பு சேர்த்து மாவைக் கறையுங்கள். கறைத்த மாவைக் குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். நன்றாக மூடி வைத்து மாவைப் புளிக்க வையுங்கள்.
8 மணி நேரத்துக்குப் பிறகு, மாவைத் திறந்து பார்க்கும்போது, மாவு நன்றாகப் புளித்து பொங்கி வந்திருக்கும். மாவைக் கலக்கக் கூடாது. கலக்காமல் இருந்தால்தான், இட்லி சாஃப்ட்டாக வரும். அப்படியே இருக்கட்டும். நன்றாகப் பொங்கி வந்திருந்தால்தான் இட்லி சாஃப்ட்டாக இருக்கும். சுவையாகவும் இருக்கும்.
இப்போது, நீங்கள் இட்லி துணி இல்லாமல் இட்லி எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள். இட்லி பாத்திரத்தில், இட்லி மாவு ஊற்றுவதற்கு முன்பு, ஒவ்வொரு குழியிலும் ஒரு சொட்டு சமையல் எண்ணெய் விட்டு நன்றாக தேய்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான், இட்லி அடியில் ஒட்டாமல் வரும்.
இதையடுத்து, புளிக்க வைத்த மாவைக் கலக்காமல் ஒரு ஓரமாக கரண்டியில் எடுத்து, எண்ணெய் தேய்த்து வைத்திருக்கும் இட்லி குழியில் ஊற்றுங்கள். அடுத்து, வழக்கம் போல, உங்கள் இட்லி பாத்திரத்தில் வைத்து ஸ்டவ்வைப் பற்ற வைத்து இட்லி செய்யுங்கள். 10 - 12 நிமிடங்களுக்குப் பிறகு, திறந்து பார்த்தால், மல்லிப் பூ போல, புசுபுசுனு சாஃப்ட்டா இட்லி வெந்து வந்திருக்கும். இப்போது இட்லியை உடனடியாக எடுக்கக் கூடாது. ஒரு 2-3 நிமிடங்கள் ஸ்டவ்வில் இருந்து இறக்கி வைத்து, ரெஸ்ட் விடுங்கள். பிறகு, இட்லியை எடுத்தீர்கள் என்றால், மிகவும் சாஃப்ட்டாக இருக்கும். அடுத்து, நீங்கள் செய்யும் சுவையான சட்னியுடன் சேர்த்து சாப்பிடும்போது, நீங்கள் செய்த இட்லி செம டேஸ்ட்டாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.