பானையில் செய்வது போல் குக்கரிலும் சோறு கஞ்சி வடிக்கலாம். இதை எளிதாக செய்யலாம். இதை செய்யும் போது கேஸ் பயன்பாடு மிச்சமாகும். எப்படி செய்வது என்று பார்ப்போம். அரிசிக்கு ஏற்ப 3 அல்லது 5 லிட்டர் குக்கர் எடுக்க வேண்டும். இது போல் செய்யும் போது 5 நிமிடத்தில் வேக வைத்து அடுப்பை ஆஃப் செய்யலாம். அதானல் கேஸ் செலவு மிச்சமாகும். Fourstar studios என்ற யூடியூப் பக்கத்தில் இந்த டிப்ஸ் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
குக்கரில் 200 கிராம் அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். அடுத்து குக்கரில் முக்கால் அளவு வரும் வரை தண்ணீர் சேர்க்க வேண்டும். பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கும் நேரம் மட்டும் அடுப்பு ஆஃன் செய்தால் போதும். உப்பு வேண்டும் என்றால் இப்போது சேர்க்கலலம்.
குக்கரில் மூடும் முன் கேஸ்கட் போட்டு விசில் இல்லாமல் அடுப்பை ஆஃன் செய்து குக்கர் வைக்க வேண்டும். High Flame-ல் தீ வைக்கவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும், ஆவி நன்கு வந்து தண்ணீர் வரும், அதன் பின் 1 நிமிடம் விட்டு அந்த நேரத்தில் விசில் போட வேண்டும். அவ்வளவு தான் இப்போது அடுப்பை ஆஃப் செய்யலாம். இப்போது விசில் வந்தாலும் பிரச்சனை இல்லை.
பின்னர் 4-5 நிமிடம் கழித்து குக்கரை ஆபன் செய்யவும், இப்போது பாத்திரத்தில் வேக வைத்தது போல் சாதம் வெந்து விடும். கேஸ்கட் எடுத்து விசில் மட்டும் போட்டு தண்ணீர் வடிக்கவும். அவ்வளவு தான் ஈஸியாக குக்கரில் சாதம் கஞ்சி ரெடியாகி விட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“