White Rice Cooking Tamil Video, How to cook rice without straining : பேச்சுலர் வாழ்க்கை இன்பம் நிறைந்தது, விருப்பப்பட்டதை செய்யலாம் என ஜாலியாக பேசித் திரிபவர்களும், டென்சன் மோடுக்கு செல்வார்கள் என்றால், சாப்பாடு விசயமாகத் தான் இருக்கும். என்ன தான் கடையிலேயே சாப்பிட்டாலும், நாமே சமைத்து சாப்பிடலாமே எனும் எண்ணம் எல்லா பேச்சுலர்களுக்கும் வரக் கூடியது தான். பேச்சுலர் வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம், சாதம் வடிப்பதாக தான் இருக்கக் கூடும். அதுவும், சாதம் குழைந்து விடாமல், உதிரியாக வடிப்பது அவ்வளவு எளிதல்ல என நினைத்திருப்பீர்கள்.
காலையிலேயே சாப்பாட்டு விசயத்துல இவ்வளவு டென்ஷன் ஆகாதீங்க பாஸ்! நீங்க சாதம் வடிக்காமலேயே, குக்கர் இல்லாமலேயே, உதிரி உதிரியா, நீங்க விரும்பி சாப்பிடுற மாதிரி சாதம் செய்வது எப்படினு தெரிஞ்சிக்க, கீழே உள்ள ஈஸி டிப்ஸ் எல்லாத்தையும் ஃபாலோ பண்ணுங்க. இன்னும் எதுக்கு வெயிட் பண்றீங்க. சாதம் செய்யலாம் வாங்க!
தேவையான அளவுக்கு அரிசியை எடுத்துக் கொள்ளவும். அதை, மூன்று முறை குடிதண்ணீர் கொண்டு அலசிக் கொள்ளுங்கள். பின்னர், மூடும் வசதி கொண்ட பாத்திரத்தில் அரிசியை இட்ட பின்னர், சமமாக இருக்கும் படி நன்றாக பரப்பி விடுங்கள். பின், அதில் தண்ணீரை ஊற்றுங்கள்.
ஒரு நிமிடம்! இங்க தண்ணீரோட அளவு தான் பாஸ் முக்கியம். பாத்திரத்தில் இட்ட அரிசியின் மேல் உங்கள் கைகளை வைத்து பாருங்கள். பாத்திரம் அடிப்பகுதியில் இருந்து தண்ணீர்ன் அளவை கணக்கில் கொள்ளக் கூடாது. இப்போது, நீங்கள் ஊற்றிய தண்ணீர், உங்கள் ஆள்காட்டி விரலின் இரண்டாவது வரியை தொடுகிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். அது தான், தண்ணீர் ஊற்றுவதற்கான சரியான அளவு.
நீங்கள் எடுத்துக் கொண்ட அளவுக்கு ஏற்ப, உப்பை போடுங்கள். பின், சாதம் ஒட்டி குழைந்து விடாமல் இருப்பதற்காக, ஒரு ஸ்பூன் எண்ணையை ஊற்றுங்கள். அப்படியே, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நன்றாக கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்ததும் தீயை குறைத்துக் கொண்டு, பாத்திரத்தின் மூடியை பாதி திறந்த நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். தீயை குறைத்து, இப்படியே ஐந்து நிமிடங்களுக்கு வேக விடுங்கள்.
மூடியை திறந்து சாதத்தை லேசாக கிளறி விடுங்கள். இப்போது, தீயை முழுவதுமாக குறைத்து சிம்மில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடங்களுக்கு இப்படியே இருக்கட்டும். இப்போது, சாதத்தை திறந்துப் பார்த்தால் லேசான ஈரப்பதத்துடன் இருக்கும். பின், சாதத்தை லேசாக கிளரிவிட்டு, அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடி வைக்கவும்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்து பார்த்தால், நீங்கள் விரும்பி சாப்பிடும் வகையில், உங்களின் பல நாள் டென்சனுக்கு விடையாக, உதிரி உதிரியான சாதம் உங்களுக்காக காத்திருக்கும். ஒரு சில நிமிடங்களுக்கு ஃபேன் காற்றில் வைத்து சூடு தணிந்தப் பின், சாப்பிடலாம்.
இது, பேச்சுலர்களுக்கான டிப்ஸ் மட்டும் அல்ல, புது மணப் பெண்களுக்கும் பொருந்தும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.