வட்ட வட்டமாக 'டோர் மேட்'... ஊசி, நூல் எதுவும் வேணாம்; பழைய புடவை மட்டும் போதும்; இப்படி ட்ரை செய்யுங்க!

பழைய புடவை அல்லது துப்பட்டாவில் இருந்து வட்ட வடிவத்தில் 'டோர் மேட்' எவ்வாறு தயாரிக்கலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், எல்லோராலும் எளிதாக செய்ய முடியும்.

பழைய புடவை அல்லது துப்பட்டாவில் இருந்து வட்ட வடிவத்தில் 'டோர் மேட்' எவ்வாறு தயாரிக்கலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், எல்லோராலும் எளிதாக செய்ய முடியும்.

author-image
WebDesk
New Update
Doormat craft

நம்முடைய வீட்டில் ஒன்றுக்கும் அதிகமாக இருக்கும் பொருட்களை பட்டியலிட்டால், அதில் 'டோர் மேட்' நிச்சயமாக இடம்பெறும். குறிப்பாக, நம் வீட்டில் அதிகமாக இருக்கும் அத்தியாவசியமான பொருளாக இருப்பது 'டோர் மேட்' தான்.

Advertisment

ஏனெனில், ஒவ்வொரு அறையின் வாசலில் நிச்சயமாக 'டோர் மேட்'-ஐ போட்டிருக்கும். இந்த 'டோர் மேட்'-ஐ கடைகளில் இருந்து வாங்கும் போது சில நூறு ரூபாய்கள் செலவாகும். ஆனால், உபயோகப்படுத்தாத சேலை அல்லது துப்பட்டாவை கொண்டு நாமே சூப்பரான 'டோர் மேட்'-ஐ தயார் செய்யலாம்.

இதற்காக, பழைய புடவையை நான்கு இன்ச் இடைவேளியில் நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு துண்டை மட்டும் எடுத்து இரட்டையாக மடித்து நடுப்பகுதியில் முடிச்சி போட்டுக் கொள்ளலாம்.

இப்போது, துணியின் முனையில் ஒரு ஊக்கு கொண்டு குத்தி, அதனை வைத்து துணியை உள்பகுதியாக இழுத்து முடிச்சிகள் போட வேண்டும். இவ்வாறு 7 முடிச்சிகளை போட்டால், முதலில் போட்ட முடிச்சி சுருங்கி வந்து விடும். இவ்வாறு மொத்தமாக 10 முடிச்சிகள் போட வேண்டும். 

Advertisment
Advertisements

இதன் பின்னர், அடுத்த துணியையும் எடுத்து அதில் ஊக்கு குத்தி மீண்டும் முடிச்சிகள் போட வேண்டும். இவ்வாறு 7 சுற்றுகளாக முடிச்சிகளை போட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு அடுத்ததாக மற்றொரு நிறத்தில் இருக்கும் பழைய புடவை அல்லது துப்பட்டாவையும் இவ்வாறு வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

இவற்றையும் ஒவ்வொரு லேயராக முடிச்சிகள் போட வேண்டும். இப்படி செய்தால் 'டோர் மேட்' தயாராகி விடும்.

நன்றி - Chellam's lifestyle vlogs Youtube Channel

Kitchen Hacks In Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: