நீங்கள் பூண்டு பயன்படுத்தும் விதம் உங்கள் உணவுகளின் சுவையை கணிசமாக பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சுவை நிறைந்த பூண்டு பச்சையாக, நறுக்கி, பொடியாக வெட்டி, அரைத்து அல்லது வறுத்து என பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படலாம்.
ஒவ்வொரு முறையும் அதன் சுவையை மாற்றுகிறது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பூண்டு தயாரிக்கப்படும் மற்றும் சமைக்கப்படும் விதம் அதன் சுவை, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சமையல் பயன்பாடுகளை வியத்தகு முறையில் பாதிக்கலாம், இது உணவுத் திட்டமிடலில் பல்துறை மூலப்பொருளாக அமைகிறது.
பூண்டின் தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்கு காரணமான அல்லிசின் கலவை, இந்த மாற்றங்களின் மையத்தில் உள்ளது, என்று உணவியல் நிபுணர் மான்வி லோஹியா (registered dietitian and head of holistic health and international business, Ekaanta, Haridwar) கூறினார்.
அலிசின் நிறைந்த பச்சை பூண்டு, அதன் வலுவான சுவைக்கு பெயர் பெற்றது. இந்த தீவிரம் சுவை மட்டுமல்ல, அதன் செறிவூட்டப்பட்ட மருத்துவ குணங்களையும் பிரதிபலிக்கிறது. அல்லிசின் ஆண்டிமைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு மற்றும் இருதய நலன்களைக் கொண்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதன் முழுமையான சத்து மற்றும் வீரியம் சமைப்பதன் மூலம் குறைந்துவிடும், அதனால்தான் பச்சை பூண்டு அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, என்று லோஹியா குறிப்பிட்டார்.
இருப்பினும், பச்சை பூண்டின் கடுமையான சுவை எப்போதும் விரும்பப்படுவதில்லை. பூண்டு சமைப்பது அதன் ரசாயன அமைப்பை மாற்றுகிறது, இது லேசான மற்றும் பெரும்பாலும் இனிமையான சுவைக்கு வழிவகுக்கிறது.
உதாரணமாக, வறுத்த பூண்டு அதை ஒரு மென்மையான, கேரமலைஸ் செய்யப்பட்ட மற்றும் கிட்டத்தட்ட நட்ஸ் ஆக மாற்றுகிறது, அதே நேரத்தில் வதக்குவது அதன் கடியை மென்மையாக்கும், இது உணவுகளுக்கு நுட்பமான கூடுதலாகும்.
இந்த முறைகள் உணர்திறன் வாய்ந்த சுவை மொட்டுகளுக்கு பூண்டை மிகவும் சுவையாக மாற்றுவது மட்டுமல்லாமல், பலவகையான உணவுகளில் தடையின்றி கலக்கவும் அனுமதிக்கின்றன, அதிக சக்தி இல்லாமல் சுவையை அதிகரிக்கின்றன, என்று லோஹியா பகிர்ந்து கொண்டார்.
பூண்டில் உள்ள நொதி எதிர்வினைகளைப் புரிந்துகொள்வதும் (enzymatic reactions) முக்கியமானது. பூண்டை வெட்டுவது, நசுக்குவது அல்லது நறுக்குவது அல்லினேஸ் என்சைம்களை செயல்படுத்துகிறது, அல்லின் -னை (மணமற்ற கந்தக கலவை) அல்லிசினாக மாற்றுகிறது.
பூண்டை எவ்வளவு நன்றாக நறுக்குகிறீர்களோ அல்லது நசுக்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அல்லிசின் உற்பத்தி செய்யப்படுகிறது, அதன் விளைவாக, வலுவான சுவை இருக்கும். பூண்டை நறுக்கிய பிறகும், சமைப்பதற்கு முன்பும் சில நிமிடங்கள் வைப்பது, அதன் ஆரோக்கிய நன்மைகளை அதிகப்படுத்தலாம், ஏனெனில் இது அல்லிசின் முழுவதுமாக உருவாக அனுமதிக்கிறது, என்று லோஹியா குறிப்பிட்டார்.
சமைக்கும் போது பூண்டின் வெப்ப சிதைவு மற்ற "ஆர்கனோசல்பர் கலவைகள்" உருவாக வழிவகுக்கிறது.
diallyl disulfide போன்ற இந்த சேர்மங்களில் சில, புற்றுநோய் உயிரணு வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் இருதய ஆபத்து காரணிகளைக் குறைக்கும் திறனுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது சமைத்த பூண்டு இன்னும் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய பண்புகளை வைத்திருக்கிறது என்று கூறுகிறது.
சிலர் வறுத்த பூண்டின் லேசான இனிப்பை விரும்பலாம், மற்றவர்கள் பச்சை பூண்டை தேர்வு செய்யலாம்.
லோஹியாவின் கூற்றுப்படி, பச்சை முதல் வறுத்தது- வதக்குவது முதல் ஊறுகாய் வரை- பூண்டை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றிய அறிவு ஒரு பொருத்தமான அணுகுமுறையை அனுமதிக்கிறது.
தயாரித்தல் மற்றும் சமையல் நுட்பங்கள்- சுவையை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு பூண்டின் ரசவாதம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
உணவியல் நிபுணர்களாக, இந்த நுணுக்கங்களை ஆராய்வதன் மூலம், உணவின் உணர்ச்சி மற்றும் ஆரோக்கிய அம்சங்களின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்ட உதவுகிறது, சமையல் மற்றும் ஊட்டச்சத்து துறைகளில் பூண்டை ஒரு பல்துறை கூட்டாளியாக ஆக்குகிறது, என்று லோஹியா கூறினார்.
/indian-express-tamil/media/media_files/ROVeYqXrqgyWat4a8dtX.jpg)
தலைமை உணவியல் நிபுணர் ஸ்ருதி கே பரத்வாஜ் (chief dietician, Zydus Hospitals, Ahmedabad), பகிர்ந்து கொண்டவை
பச்சை பூண்டு
பச்சை பூண்டைப் பயன்படுத்துவது வலுவான மற்றும் கடுமையான சுவையை வழங்குகிறது. இது சாலடு, டிரஸ்ஸிங் மற்றும் டிப்ஸில் நன்றாக இருக்கும்.. பச்சைப் பூண்டை பொடியாக நறுக்குவது அதன் தீவிர சுவையை அதிகமாக வெளியிடுகிறது, என்று பரத்வாஜ் பகிர்ந்து கொண்டார்.
வெட்டிய பூண்டு
பூண்டை நறுக்குவது அல்லது வெட்டுவது பச்சையான பூண்டுடன் ஒப்பிடும்போது லேசான சுவையை அளிக்கிறது. இது பொதுவாக ஸ்டிர்-ஃப்ரைஸ், வதக்குவது அல்லது பல்வேறு உணவுகளுக்கான அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. பெரிய துண்டுகள், மென்மையான சுவை.
அரைத்த பூண்டு
நறுக்கிய அல்லது வெட்டப்பட்ட பூண்டுடன் ஒப்பிடும்போது, அரைத்த பூண்டு அதிக செறிவூட்டப்பட்ட சுவையை சேர்க்கிறது. இது பாஸ்தா, சாஸ், சூப் மற்றும் மரினேட்ஸ் போன்ற பரந்த அளவிலான உணவுகளுக்கு ஏற்றது, என்று பரத்வாஜ் கூறினார்.
நசுக்கிய பூண்டு
பூண்டை நசுக்குவது அதன் அத்தியாவசிய எண்ணெய்களை வெளியிடுகிறது, மேலும் சுவையை தீவிரப்படுத்துகிறது. இது பெரும்பாலும் மரினேட்ஸ், இறைச்சி மேல் தடவ அல்லது பூண்டு சுவை விரும்பும் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது, என்று பரத்வாஜ் கூறினார்.
வறுத்த பூண்டு
வறுத்த பூண்டு ஒரு இனிமையான மற்றும் மென்மையான சுவையை விளைவிக்கும். பூண்டு பல் மென்மையாக மாறும், இது உருளைக்கிழங்கு மசியல், ஸ்ப்ரெட் அல்லது பிரெட் டாப்பிங்ஸ் போன்றவற்றுக்கு சிறந்த கூடுதலாகும், என்று பரத்வாஜ் கூறினார்.
குறிப்பு
பூண்டை அதிக நேரம் சமைப்பது கசப்பாக மாறும், எனவே வதக்கும் போது சமைக்கும் செயல்முறையின் முடிவில் சேர்க்கவும்.
Read in English: Whole, crushed, or minced: How to cut garlic for more flavour, benefits
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“