பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர், எண்ணெய்யில் வடை சுடும்போது டீப் ஃபிரை செய்ய சில குறிப்புகளை பகிர்ந்துகொண்டார்.
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், மிதமான சூட்டில் ஆழமாக வறுக்க வேண்டும்.
அது மிதமான சூடாக இருக்கும்போது, அதில் 3-4 வடைகளை மெதுவாக ஸ்லைடு செய்யவும். மேல் பகுதி வெளிர் பழுப்பு நிறமாக மாறியதும், அவற்றைப் புரட்டி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை ஆழமாக ஃபிரை செய்யவும்.
வடை நன்கு வெந்ததும் எண்ணெய்யை வடிகட்டி ஒரு தட்டில் மாற்றவும். மீதமுள்ள வடைகளை ஆழமாக வறுக்கவும், என்றார் திவேகர்.
டீப் ஃபிரை செய்வது அதிக எண்ணெயை உட்கொள்வதால், சில பொதுவான தவறுகளைத் தவிர்க்க உதவும் சில எளிய விதிகளைக் கடைப்பிடிப்பது முக்கியம்.
*சிறிய பர்னரைப் பயன்படுத்தவும்
*கடாய் உலர்ந்ததாக இருக்க வேண்டும்
*எண்ணெய் புகைபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது போதுமான சூடாக இருக்க வேண்டும்
*எண்ணெய் தயாராக இருக்கிறதா என்று பார்க்க, கொஞ்சம் எடுத்து டீப் ஃபிரை செய்யவும்.
*வடைகளை திருப்பி போடும் முன் எண்ணெய் குமிழ்கள் வரும் வரை காத்திருங்கள்.
*எப்போதும் குறைந்த தீயில் சமைக்கவும்
ஊட்டச்சத்து நிபுணர் ப்ரெர்ன்னா கல்ரா, நெய்யை பயன்படுத்த பரிந்துரைத்தார். நெய்யில் high heating point உள்ளது, அதாவது அதன் ஊட்டச்சத்து மதிப்பை அவ்வளவு சீக்கிரம் இழக்காது.
மேலும், உணவை இரும்புச்சத்து நிறைந்ததாக மாற்ற இரும்பு கடாயைப் பயன்படுத்தலாம், என்று கல்ரா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“