உணவு மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சினை. இது வெறும் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இத்தகைய கலப்படத்தின் நீண்டகால விளைவுகள் ஒருவரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கலாம். அதுபோல அன்றாடம் பயன்படுத்தப்படும் சமையலறைப் பொருட்களில் ஒன்று, சமையல் எண்ணெய். இது கலப்படமாகவும் இருக்கலாம். இந்த முக்கியமான விஷயத்தை எடுத்துரைத்தது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI). எண்ணெய் மெட்டானில் மஞ்சள் நிறமாக கலப்படம் செய்யப்படுவது குறித்து ஆணையம் கூறுகிறது.
ஜெய்ப்பூர், நாராயண மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர், டாக்டர் அஜய் நாயர் கூறுகையில், எண்ணெய் கலப்படத்தைக் கண்டறிய நுணுக்கமான சோதனைகளும், கூரிய கண் பார்வையும் தேவை என்கிறார்.
"கலப்பட எண்ணெய்கள் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் நம்பிக்கைக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகின்றன. இத்தகைய வஞ்சகத்தை வெளிக்கொணர, புலன் பகுப்பாய்வு போன்ற பல முறைகளைப் பயன்படுத்தலாம். எண்ணெய்யின் நிறம், வாசனை, சுவை ஆகியவற்றைக் கவனியுங்கள். ஏதேனும் அசாதாரணமான அல்லது தவறான பண்புகள் கலப்படத்தைக் குறிக்கலாம்” என்று டாக்டர் நாயர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், நீங்கள் ஒரு காட்சி தெளிவு சோதனை செய்யுங்கள். சுத்தமான எண்ணெய்கள் பொதுவாக வெளிப்படையானவை. "அத்துடன், ஆய்வக சோதனைகள் இன்றியமையாதவை. முரண்பாடுகளை அடையாளம் காண ஒளிவிலகல் குறியீடு மற்றும் குறிப்பிட்ட ஈர்ப்பு அளவீடுகள் போன்ற இயற்பியல் சோதனைகளை நடத்தவும். கொழுப்பு அமில கலவை பகுப்பாய்வு மற்றும் வாயு குரோமடோகிராபி போன்ற இரசாயன சோதனைகள் கலப்படம் அல்லது அசுத்தங்களை மேலும் வெளிப்படுத்தலாம் என்று கூறினார்.
கலப்பட எண்ணெய்யை கண்டறிய FSSAI 5 வழிமுறைகளை கூறியுள்ளது.
- டெஸ்ட் டுயூப்-ல் 1 மில்லி எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும்.
- இதனுடன் 4 மில்லி காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை சேர்க்கவும்.
- டெஸ்ட் டுயூப்யை Shake செய்யவும்.
- மற்றொரு டெஸ்ட் டுயூப்-ல் 2 மில்லி எண்ணெய்யை எடுக்கவும்
- இதில் 2 மில்லி செறிவூட்டப்பட்ட HCL ஐ சேர்க்கவும்.
கலப்படமற்ற எண்ணெயின் மேல் அடுக்கில் எந்த நிற மாற்றமும் காணப்படாது.
கலப்படம் செய்யப்பட்டால், எண்ணெயின் மேல் அடுக்கில் நிறம் சிவப்பு நிறமாக மாறும்.
இது மட்டும் கலப்படம் அல்ல. பல்வேறு வழிகளிலும் இதைக் கண்டறியலாம்.
உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூறுகையில், “மெட்டானில் மஞ்சள் என்பது இந்தியாவில் அனுமதிக்கப்படாத உணவு வண்ணமாகும், இது மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல.” என்கிறார்.
ஒரு பொதுவான எண்ணெய் கலப்படம் tri-ortho-cresyl-phosphate (TOCP) ஆகும். "இது ஒரு ஆர்கனோபாஸ்பரஸ் பொருளாகும், இது விஷத்தின் பல சம்பவங்களுக்கு காரணமாகும். எண்ணெயில் இந்த கலவை இருப்பதைக் கண்டறிய, ஒரு பாத்திரத்தில் 2 மில்லி எண்ணெயை எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் வெண்ணெய் சேர்க்கவும். எண்ணெயின் நிறம் மாறவில்லை என்றால், எண்ணெய் தூய்மையானது மற்றும் நுகர்வுக்கு பாதுகாப்பானது. நிறம் சிவப்பு நிறமாக மாறினால், எண்ணெய் தூய்மையற்றது மற்றும் மனித நுகர்வுக்கு ஆபத்தானது, ”என்று கோயல் கூறினார்.
சில சமயங்களில், தேங்காய் எண்ணெயில் மற்ற எண்ணெய்கள் கலக்கப்படுகின்றன என்பதையும் அவர் கூறினார். “தேங்காய் எண்ணெயில் மற்ற எண்ணெய்கள் சேர்க்கப்படுவதை நீங்கள் கண்டறிய வேண்டும் என்றால், தேங்காய் எண்ணெயை ஒரு வெளிப்படையான கண்ணாடியில் எடுத்து, இந்த கண்ணாடியை சுமார் 30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். குளிரூட்டல் தேங்காய் எண்ணெயை திடப்படுத்துகிறது, ஆனால் மற்ற எண்ணெய்கள் ஒரு தனி அடுக்காக இருக்கும்”என்று கோயல் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.