Advertisment

பால், முட்டை, தேன்: கொஞ்சம் தண்ணீர் போதும்: உணவுக் கலப்படத்தை கண்டுபிடிக்க சிம்பிள் டிரிக்

ஆனால் கவலைப்பட வேண்டாம். நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட தகவலுடன் உங்கள் வீட்டிலேயே இதைச் செய்ய நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

author-image
WebDesk
New Update
how to detect food adulteration

How to detect food adulteration

உணவுக் கலப்படம் தொடர்பான வழக்குகளின் பரவலான அதிகரிப்பு, சந்தையில் ஊடுருவிய போலிகளை அடையாளம் காண்பதை மிகவும் முக்கியமானதாக ஆக்கியுள்ளது.

Advertisment

ஆனால் கவலைப்பட வேண்டாம். நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட தகவலுடன் உங்கள் வீட்டிலேயே இதைச் செய்ய நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

எனவே, ஒரு சில நீர் பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்த டயட்டீஷியன் சோனியா நரங்கின் இன்ஸ்டா போஸ்ட் பார்த்தபோது, ​​இதுகுறித்து மேலும் அறிய டாக்டர் சங்கீதா திவாரியிடம் பேசினோம். (clinical nutritionist, Artemis Lite, NFC, New Delhi)

கருப்பு மிளகு                                                                                     

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது கருப்பு மிளகு போடவும். உண்மையான மிளகு மூழ்கும், அதே நேரத்தில் கலப்படம் மிதக்கும்.

இது ஓரளவு உண்மை என்ற டாக்டர் திவாரி, உண்மையான கருப்பு மிளகுத்தூள் அவற்றின் அடர்த்தியின் காரணமாக மூழ்கும் போது, ​​இது ஒரு நம்பகமான சோதனை அல்ல என்று விளக்கினார்.

சில கலப்பட மிளகும் மூழ்கக்கூடும், மேலும் சில மிளகு காற்றைப் பிடித்து மிதக்கக்கூடும், என்று டாக்டர் திவாரி கூறினார்.

கிராம்பு

சில கிராம்புகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் போடவும்.

தூய கிராம்புகள் செங்குத்தாக மிதக்கும் அல்லது மூழ்கும், அதே சமயம் கலப்படம் செய்யப்பட்டவை, செயற்கை கிராம்பு தண்டுகள் (artificial clove stems) போன்ற கூடுதல் பொருட்களால் கிடைமட்டமாக மிதக்கும்.

இருப்பினும், சுத்தமான கிராம்புகள் செங்குத்தாக மூழ்கலாம் அல்லது மிதக்கலாம் என்றும், கிடைமட்டமாக மிதப்பது கலப்படத்தின் உத்தரவாதமான குறிகாட்டியாக இருக்காது, கிராம்பு வடிவம் மற்றும் காற்று மிதக்கும் தன்மையை பாதிக்கும், என்றும் டாக்டர் திவாரி பகிர்ந்து கொண்டார்.

மஞ்சள்

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து, கிளறாமல் விடவும். தூய மஞ்சள் கீழே குடியேறும், அதே நேரத்தில் செயற்கை வண்ணங்கள் தண்ணீரில் கரைந்துவிடும், என்று நரங் கூறினார்.

டாக்டர் திவாரி இதை ஒப்புக்கொண்டார்.

how to detect food adulteration egg

தேன்

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேனை விடவும். சுத்தமான தேன் விரைவில் கரையாமல் அடியில் குடியேறும். கலப்படம் செய்யப்பட்ட தேன் கரைந்து அல்லது அடுக்குகளை உருவாக்குகிறது.

மிகவும் நம்பகமான கட்டைவிரல் சோதனை

உங்கள் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் ஒரு துளி தேன் தேய்க்கும்போது சுத்தமான தேன் அதன் வடிவத்தைத் தக்க வைத்துக் கொள்ளும், என்றார் டாக்டர் திவாரி.

முட்டை

ஒரு கப் தண்ணீரில் முட்டையை விடவும்.

நரங்கின் கூற்றுப்படி, புதிய முட்டைகள் மூழ்கும், அதே நேரத்தில் பழைய முட்டைகள் பெரிய காற்று செல்கள் காரணமாக மிதக்கும்.

டாக்டர் திவாரி இதை ஒப்புக்கொண்டார்.  

சிறிய காற்று செல் காரணமாக புதிய முட்டைகள் மூழ்கிவிடும். முட்டைகள் வயதாகும்போது, ​​​​காற்று செல் பெரிதாகிறது, இதனால் அவை மிதக்கின்றன. இருப்பினும், இது ஒரு சரியான சோதனை அல்ல. மிகவும் குளிர்ந்த நீர் புதிய முட்டைகளை கூட மிதக்க வைக்கும், என்று டாக்டர் திவாரி கூறினார்.

பால்

5 முதல் 10 மில்லி பால், சம அளவு தண்ணீருடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பாலில் சோப்பு கலந்திருந்தால், அது அடர்த்தியான நுரையை உருவாக்குகிறது. தூய பால் மிக மெல்லிய நுரை அடுக்கை உருவாக்கும், என்றார் நரங்.

வை பொதுவான நீர் சோதனைகள், கலப்படத்தைக் கண்டறிய இதை மட்டுமே நம்பக்கூடாது. உணவில் கலப்படம் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், அதை ஒரு தொழில்முறை ஆய்வகத்தில் பரிசோதிப்பது நல்லது, என்று டாக்டர் திவாரி கூறினார்.

Read in English: Can these simple water tests help detect adulteration in foods like eggs, milk, honey?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment