Advertisment

உங்க நிலத்தின் புல வரைபடம் மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி?

மொபைலில் நிலத்தின் புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
Jul 21, 2022 14:15 IST
tiruchi district, trichy, srirangam, kallanai road, cauvery flooding, banana trees damage, farm land spoiled

வீடு, வயல்வெளி நிலத்தின் புல வரைபடம் மொபைலில் எளிதாக டவுன்லோட் செய்யலாம். அதற்கு முதலில் கூகுளில் தமிழ்நாடு அரசின் நிலப்பதிவேடு மின்னணு சேவை என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் மாவட்டத்தை தேர்வு செய்து, பகுதி வகை, கிராமப்புறம், நகர்ப்புறத்தை தேர்வு செய்ய வேண்டும்.

Advertisment

இதைக் கொடுத்தப்பிறகு, அடுத்த பக்கத்திற்கு செல்லும் அதில், வட்டம் (தாலுகா), கிராமம் குறிப்பிட்ட பிறகு, பட்டா, சிட்டா விவரங்களை பார்வையிட என்ற இடத்தில் மூன்று ஆப்ஷகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில், உங்களுக்கு ஏற்றபடி பதிவிட்டு, அங்கீகார மதிப்பு (எண்கள், எழுத்துகளை) பதிவிடவும். உங்கள் நிலம் எந்த பகுதியில் வருகிறது என்பதை தெரிந்தால் புல எண் என்ற இடத்தில் பதிவிடலாம். அதன் பின், பட்டா, சிட்டா அல்லது புலப்படம் வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த விவரங்களை கொடுத்தால் மேப் வந்துவிடும். வேறு மொழி (ஆங்கிலத்தில்) வேண்டுமானாலும் விவரங்களை குறிப்பிடலாம். புலம்படம் என்றால் அதில் நீங்கள் குறிப்பிட்ட விவரங்கள் இடம், தாலுகா, எண் குறிப்பிட்ட புலப்படம் தோன்றும். நில அமைப்பு, எல்லைகள் என அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். விஏஓவிடம் சென்று வாங்கி வந்திருப்போம், இப்போது இதை ஆன்லைனிலேயே அரசு வழங்குகிறது. கியூஆர் கோட் கொடுக்கப்பட்டிருக்கும், ஸ்கேன் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். பிரிண்ட் அவுட்டும் எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.

/
#Youtube Video #Tamilnadu #Online News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment