தண்ணி மேல மிதக்கக் கூடாது... விந்தணு பரிசோதனை வீட்டிலேயே இப்படி செய்யுங்க: டாக்டர் யோக வித்யா!

ஆண்களின் விந்தணுக்கள் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு வீட்டிலேயே ஒரு எளிமையான பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைத்துள்ளார்.

ஆண்களின் விந்தணுக்கள் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு வீட்டிலேயே ஒரு எளிமையான பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sperm test

தற்போது சமூகத்தில் நிலவி வரும் குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண்களின் விந்தணுக்கள் தரமானதாக இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக அமைகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், மன அழுத்தம் என பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.

Advertisment

எந்த அளவிற்கு ஒரு ஆணின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். இதற்காக விந்தணுக்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, திருமணத்திற்கு முன்பாகவே விந்தணுக்களை பரிசோதனை செய்து கொண்டால், அதில் ஏதேனும் பிரச்சனை இருக்கும்பட்சத்தில், அந்தப் பிரச்சனையை சரி செய்து கொள்ள வசதியாக இருக்கும்.

அந்த வகையில் விந்தணுக்கள் பரிசோதனை தொடர்பாக ஆய்வுக் கூடங்களுக்கு செல்வதற்கு முன்பாக வீட்டிலேயே எளிமையான முறையை பின்பற்றலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். இதன் மூலம் விந்தணுக்கள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விந்தணுவை ஒரு கிளாஸ் நீரில் போடும் போது, அவை நேராக தண்ணீரின் அடிப்பகுதிக்கு சென்றால் அவை ஆரோக்கியமாக இருக்கிறது என்ற அர்த்தம் என மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த விந்தணு விரைவாக கரைந்து தண்ணீரின் மேற்பகுதியில் மிதந்தால், அது ஆரோக்கியமாக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

உதாரணமாக, நல்ல முட்டையை தண்ணீரில் போட்டால் அது தண்ணீரின் அடிப்பகுதிக்கு சென்று விடும். இதுவே கெட்டுப் போன முட்டையாக இருந்தால், அது தண்ணீரில் மிதக்கும். இதே முறை தான் விந்தணு பரிசோதனையிலும் இருக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார்.

எனினும், இது குறித்த துல்லியமான முடிவுகளை பெற விரும்புபவர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற நம்பகமான ஆய்வுக் கூடங்களுக்கு சென்று பரிசோதிக்கலாம்.

நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to improve sexual health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: