தேனை சுவைக்காக பயன்படுத்துபவர்களை விட மருந்தாக பயன்படுத்துபவர்கள் அதிகம். இதில், என்ஸைம்ஸ், வைட்டமின், மினரல்கள், அன்டி ஆக்சிடென்ட்ஸ் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
ஆனால், தேனில் பெருமளவு கலப்படம் உள்ளது. எனவே உண்மையான தேனை கண்டறிவது பெரும் சவாலான காரியம். அப்படி இருக்கையில் சில வழிமுறைகள் மூலம் சுத்தமான தேனை கண்டறிய வாய்ப்புள்ளது. அவை என்னவென்று இதில் பார்க்கலாம்.
உண்மையான தேனில் மகரந்தம் காணப்படும். எனவே, மகரந்தம் உள்ள தேனை தேர்வு செய்து வாங்க வேண்டும். இதனை கண்டறிய ஒரு எளிய வழி உள்ளது. தேன் இருக்கும் கண்ணாடி பாட்டிலில் ஒரு ஸ்பூனை போட வேண்டும். இப்போது ஸ்பூன் பார்ப்பதற்கு வெளிப்புறத்தில் தெரிந்தால் அது உண்மையான தேன் கிடையாது. மகரந்தத்தின் அடர்த்தியால் உண்மையான தேனில் வெளிப்புறத்தில் ஸ்பூன் தெரியாது.
மேலும், வடிகட்டுவதன் மூலம் கலப்படம் இல்லாத தேனை கண்டறியலாம். ஒரு வடிகட்டியை எடுத்து அதில் தேனை ஊற்ற வேண்டும். இப்போது, மகரந்தம் இருப்பதை காணலாம். இவ்வாறு மகரந்தம் இல்லையென்றால் அது சுத்தமான தேன் கிடையாது.
மற்ற பாரம்பரிய முறைகளில் தற்போது சுத்தமான தேனை கண்டறிவது கடினம். அதற்கு ஏற்றார் போல் தேனில் கலப்படம் செய்யப்படுகிறது. எனவே, மகரந்தம் நிறைந்திருப்பது சுத்தமான தேனாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“