உங்க ஸ்மார்ட்ஃபோன் தொலைந்து விட்டதா? கவலலைய விடுங்க 2 நாட்களில் உங்கள் கைக்கு மறுபடியும் வர இதை செய்தால் போதும்!

Now Find Lost Phone With Government Help: கூகுள் மேப் உதவியுடன் ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்கலாம்.

how to find stolen mobile
how to find stolen mobile

How To Easily Find Lost Phone : முன்பெல்லாம் மொபைலை யாரேனும் திருடிவிட்டால் அது உடனே அவருடைய சொந்தப் பொருளாக ஆகிவிடும். சிம்மைக் கழற்றி எறிந்து விட்டால் போன் கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆகிவிடும். போனைக் கண்டுபிடிப்பதை விட நாலு கொம்புள்ள குதிரையைக் கண்டு பிடித்து விடலாம். ஆனால் இப்போதெல்லாம் அப்படியல்ல. டெக்னாலஜி வளர்கிறது. மொபைலைத் திருடிச் சென்றாலும் அதை விரைவிலேயே கண்டுபிடித்து விடும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

ஒரு மொபைலை வாங்கினவுடனே என்ன பண்ணுவீங்க ?போனோட IMEI நம்பரை நோட் பண்ணி வையுங்க. அதான் ரொம்ப முக்கியம். இண்டர்நேஷனல் மொபைல் எக்யுப்மெண்ட் ஐடெண்டிடி என்பது தான் இதன் விரிவாக்கம். அதாவது சர்வதேச மொபைல் எண். ஒவ்வொரு மொபைலுக்கும் தனித் தன்மையான ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும். இது பதினைந்து இலக்க எண்.

How to Locate Your Mobile Phone : சரி இப்ப உங்கள் மொபைல் ஃபோன் தொலைந்து விட்டால் அதை எப்படி கண்டுப்பிடிக்கலாம் என்ற வழிமுறைகள்ள் உங்களுக்காக!

1. கூகுள் மேப் எனப்படும் வழிகாட்டியை நாம் பயன்படுத்த வேண்டும் என்றாலும், இல்லை பேக் அப்பில் புகைப்படம், வீடியோ மற்றும் டேட்டாக்களை கண்டுபிடிக்க நாம் மெயில் ஐடியை பதிவு செய்து வைத்து இருப்போம். இதன் மூலம் நாம் கூகுள் மேப் உதவியுடன் ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்கலாம்.

2. IMEI நம்பரை பயன்படுத்தி காணாமல் போன போன் இருக்கும் இடத்தை அறிய முடியும். அது மட்டுமின்றி அந்த செல்போனில் தற்போது சிம் கார்டு மாற்றப்பட்டாலும் அதன் இடத்தை ட்ராக் செய்வது எளிது. ஒருவரது போன் காணமல் போனாலோ அல்லது எங்கேயாவது தவறவிட்டாலோ அதனை இந்த எண் கண்டறிவது மிகவும் சுலபம்.

3. Lock My Mobile- இதன் மூலம் கணிணி மூலமே உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும்.

4.Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கூட ரிங் ஆகும்.

5.Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் receive ஆன அழைப்புகளின் தகவல்களை பெறலாம்

6. Wipe My Mobile- நீங்கள் செமித்து வைத்த தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் வேலைகளை செய்து கொள்ளலாம்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to find stolen mobile how to track stolen mobile phone

Next Story
இந்த சூப் குடிங்க, நோய்களுக்கு bye bye சொல்லுங்க!!!immunity,boosting,soup,recipes, நோய்,சக்தி,சூப்,காய்கறி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com