குக்கர் கைப்பிடி அடிக்கடி கழடுதா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!
குக்கரின் கைப்பிடி அடிக்கடி கழன்று வருகிறதா? கவலையே வேண்டாம்; அதனை எவ்வாறு டைட்டாக மாட்டுவது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்கு பாலித்தீன் கவர் இருந்தால் போதுமானது.
குக்கரின் கைப்பிடி அடிக்கடி கழன்று வருகிறதா? கவலையே வேண்டாம்; அதனை எவ்வாறு டைட்டாக மாட்டுவது என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்கு பாலித்தீன் கவர் இருந்தால் போதுமானது.
ஒவ்வொரு நபரின் வீட்டில் இருக்கும் கிச்சனும் வித்தியாசமாக இருக்கும். அங்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களும் வித்தியாசமாக இருக்கும். ஆனால், அனைத்து வீட்டு கிச்சனிலும் ஒரு பிரச்சனை மட்டும் பொதுவானதாக இருக்கும்.
Advertisment
ஆம், எல்லோருடைய வீட்டு கிச்சனிலும் இருக்கும் குக்கரின் கைப்பிடி பெரும்பாலான நேரத்தில் லூசாக இருக்கும். இதனை எத்தனை முறை டைட் செய்தாலும், இரண்டே நாட்களில் பழைய நிலைக்கு திரும்பி விடும்.
இதற்காக புதிய கைப்பிடியை கடைகளில் இருந்து வாங்கி மாட்டினாலும், அதுவும் சில நாட்களில் லூசாகி விடும். இந்தப் பிரச்சனைக்கு ஒரு சிம்பிளான தீர்வு இருக்கிறது. இதற்காக ஒரு பாலித்தீன் கவர் மட்டும் இருந்தால் போதும்.
வீட்டில் இருக்கும் பாலித்தீன் கவரில் இருந்து சிறியதாக ஒரு துண்டை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது குக்கரில் லூசாக இருக்கும் கைப்பிடியை கழற்றி, அதன் நட்டை மட்டும் தனியாக எடுக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இப்போது, குக்கரில் இருந்து கழற்றிய நட்டைச் சுற்றி வெட்டி வைத்திருந்த பாலித்தீன் கவரை சுற்றிக் கொள்ளலாம். இனி, குக்கரின் நட்டையும், கைப்பிடியையும் சேர்த்து மாட்டிக் கொள்ள வேண்டும். இந்த பாலித்தீன் கவர் மீது லேசாக நெருப்பை காண்பித்தால், அது அப்படியே சுருங்கிக் கொள்ளும்.
இப்படி செய்வதன் மூலம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், குக்கரின் கைப்பிடி கழன்று வராமல் இருக்கும். இந்த டிப்ஸை குக்கர் மட்டுமின்றி கைப்பிடி இருக்கும் எந்த விதமான பாத்திரத்திற்கும் பயன்படுத்தலாம்.