நமது குடல் ஆரோக்கியம்தான் ஒட்டுமொத்த ஆரோகியத்திற்கு உதவியாக உள்ளது. இந்நிலையில் மோசமாக இருக்கும் குடல் ஆரோக்கியத்தை 14 நாட்களில் நல்ல மாற்றத்தை கொண்டுவர முடியும்.
இதனால் நமது குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த மாற்றத்தால் ஜீரணம் இன்னும் சீராகும். குடலின் செயல்பாடுகள் சரியாகும்.
நாம் ஒரே மாதிரியான உணவு எடுத்துகொள்ளலாமல். எல்லா வகையான உணவுகளை நாம் எடுத்துகொள்ளலாம். வித்தியாசமான உணவுகள், நமது குடலில் உள்ள வெவ்வேறு பேக்டீரியாக்களுக்கு உதவியாக இருக்கும்.
மெதுவாக மென்று சாப்பிடுவது, இதனால் உங்களது ஜீரணத்திற்கு கூடுதல் உதவியாக இருக்கும். நாம் மெதுவாக சாப்பிடுவதால், உணவு சிறிய பொருட்களாக உடையும். இதனால் ஜீரணத்திற்கான என்சைம், உணவை எளிதாக ஜீரணிக்க வைக்கும்.
மைக்ரோநீயூட்ரியண்ட், தாவர வகை உணவிகளில் உள்ளது. பாலிபினால்ஸ் குறிப்பாக சில உணவுகள், மூலிகை இலைகள், மாசாலா பொருட்களில் உள்ளது.
நாம் எடுத்துகொள்ளும் நார்சத்து, குடலில் உள்ள நல்ல பேக்ட்ரீயா வளர்வதற்கு உதவுகிறது. நார்சத்து நிறைந்த பழங்கள், உணவுகள், பருப்பு வகைகள், முழுதானியங்கள், சிறுதானியங்களை நாம் சாப்பிட வேண்டும். நார்சத்து குடலில் உள்ள நுண்ணுயிரிகள் வளர்வதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தும்.
சர்க்கரை அதிகம் சேர்த்த உண்வுகளை நாம் கைவிட வேண்டும். இதுபோல இரவில் 13 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை நாம் சாப்பிடாமல் இருந்தால், நமது குடல் உள்ள நுண்ணுயிரிகள் நிலை நன்றாக இருக்கும்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“