பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
ஆடிப்பட்டம் ஆடிப் பருவம் வந்து விட்டாலே கிராமப்புறங்களில் காய்கறி கொடி வகைகளில் தியாகம் நாட்டு காய்கறிகள் நட்டு அறுவடை செய்வது வழக்கம். அந்த வகையில் ஆடிப்பட்டம் ஆடிப் பருவம் தொடங்கி விட்டது. கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மூன்று மாத பயிரை நடுவு செய்வதற்காக நிலங்களை தயார் படுத்தி வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, நாகரிக வளர்ச்சிக்கு ஏற்றவாறு கிராமப்புறங்களில் இருந்து பலரும் நகரப் பகுதிகளுக்கு குடியேறி விட்டனர். இவர்களும் ஆடிப்பட்டம் வருவதால் தங்களது மாடியில் அல்லது வீட்டைச் சுற்றி எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ, அங்கெல்லாம் செடி, கொடிகளை வைத்து அழகு பார்க்கிறார்கள். அத்துடன் தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார்கள்.
அதில் விளையும் காய்கறிகளை ஆர்கானிக் முறையில் பயன்படுத்தி தங்களது தேவைக்காக வைத்துக் கொள்கின்றனர். ஒரு சிலர் அதிகமாக உற்பத்தி செய்து தங்களுக்குகுத் தெரிந்தவர்களிடம் விற்பனை செய்து வருகிறார்கள். இதுபோன்ற, மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், புதுச்சேரி தோட்டக்கலைத்துறை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆடிப்பட்ட பருவத்திற்கு ரூ. 4 லட்சம் வரை செலவு செய்கிறது.
நகரத்தில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க புதுச்சேரி தோட்டக்கலைத்துறை மாடித்தோட்ட கிட் வழங்கி வருகிறது. பெங்களூரு நிறுவனத்திடம் இடமிருந்து வாங்கப்படும் இந்த கிட்டில் முதல் ரக விதைகள் உள்ளது. உருளைக்கிழங்கு, தக்காளி கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரை உள்ளிட்ட எட்டு வகையான விதைகள் அந்த கிட்டில் உள்ளது.
புதுச்சேரி வாசிகளுக்கு இந்த விதைகளை அரசின் தோட்டக்கலைத்துறை நேற்று முதல் இலவசமாக வழங்கி வருகிறது. ரூபாய் 200 மதிப்புள்ள விதை பெட்டியில் விதைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதனை, புதுச்சேரி அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 20 தோட்டக்கலை துறை அலுவலகத்தில் பொதுமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ஒரு விண்ணப்பம் அந்தெந்த அலுவலகத்தில் வழங்கப்படுகிறது
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகிய இரண்டையும் இணைத்து அந்த விண்ணப்பத்துடன் கொடுத்தால் ரூபாய் 200 மதிப்புள்ள முதல் ரக காய்கறி விதைகளை வழங்குவார்கள். இதை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மாடி தோட்டம் அமைத்து நல்ல மகசூல் பார்க்கலாம். இதேபோன்று கிராமப்புறங்களில் செய்தும் நல்ல மகசூல் பார்க்கலாம்.
இந்த வகையான மாடித்தோட்டத்தை அமைத்த பலரும் அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அதனால் தான் இதனை புதுச்சேரி அரசு கையில் எடுத்து, பொதுமக்களை அதிகளவு மாடித்தோட்டம் அமைக்க ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை புதுச்சேரி முதல்வரின் அலுவலகத்தில் நடந்தது ஆடிப் பருவத்திற்கான காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை பிரிவின் மூலம் புதுச்சேரி பகுதியில் தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தி திறன் அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி முதலமைச்சர் என். ரங்கசாமி வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பை வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் முனைவர்.வசந்தகுமார், கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) ஜாகீர் உசைன், துணை வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) சண்முகவேலு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“