/tamil-ie/media/media_files/uploads/2018/03/4-15.jpg)
பெண்களின் முகத்தில் முகப்பருவிற்கு அடுத்தப்படியான பிரச்சனையாக இருப்பது கருவளையம் தான். கண்களுக்கு அடியில் வரும் கருவளையம் பெண்களின் மொத்த அழகையும் கெடுப்பத்காக டீனேஜ் பெண்கள் புல்ம்புவதை கேட்டிரூப்போம்.
பொதுவாகவே கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. தூக்கமின்மை, குறைவான வெளிச்சத்தில் படிப்பது, இரவில் அதிக நேரம் ஸ்மார்ஃபோன்களை உபயோகிப்பது, லேப்டாம், சிஸ்டமில் அதிகம் நேரம் செலவிடுவது என ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன.
இந்த கருவளையத்தை போக்க, பார்லர் சென்றால், அங்கு அவர்கள் நமக்கு ஏதோ நோய் வந்துவிட்டது போ, முதலில் உங்கள் ஸ்கீன்னை சோதனை செய்ய வேண்டும், எதனால் வந்தது என்று கண்டுப்பிடிக்க வேண்டும், அதன் பின்பு உணவை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் போல் பேசி ஆயிரக்கணக்கில் பணத்தை பறித்து விடுவார்கள். ஆனால், இறுதியில் கருவளையம் முழுமையாக போனதா என்றால் அது சந்தேகம் தான்.
இன்றைய டீனேஜ் பெண்கள், கருவளையத்தை மறைக்கவே மேக்க அப் போடுவதாக வெளிப்படையாக வெளியில் கூறுகின்றன. இப்படி பெரிய பிரச்சனையாக இருக்கும் கருவளையத்தை காணாமல் போக சூப்பர் டிப்ஸ்.
முதலில் பச்சை வாழைப்பழத்தை வாங்கி வந்து, தோலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும், பின்பு அந்த தோலில் சிறிதளவு விளக்கெண்ணையை தடவிக் கொள்ள வேண்டும். இப்போது அந்த தோலை எடுத்து கண்ணை சுற்றி வைத்து 20 நிமிடங்கள் கண்களை மூடிக் கொள்ள வேண்டும்.
பின்பு, குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். இப்படியே தொடர்ந்து 7 நாட்களுக்கு செய்தால் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும். விளக்கெண்ணை குளிர்ச்சியானது. கண்களில் இருக்கும் அதிகப்படியாக சூட்டை எடுத்து குளிர்ச்சியியை தருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.