வீட்டில் எலி இருந்தால் அதுவே பெரும் பிரச்சனையாக மாறிவிடும். எலிகள், வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ் போன்றவற்றின் வயர்களை கடித்து சேதப்படுத்துவதுடன், உணவு பொருள்களும் எலிகளால் பாதிக்கப்படுகின்றன. இதனால் வீட்டில் இருப்பவர்கள் நோய்வாய்ப்படுவதுவற்கு சாத்தியக் கூறுகள் உள்ளன.
இதை தடுக்க ஒரு எளிய வழி உள்ளது. ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், தலைக்கு குளிக்க பயன்படும் ஷம்பூ சிறிது அளவு, 4 அல்லது 5 வேர்க்கடலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இறுதியாக இதில் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இந்த மாவை சிறிய உருண்டைகளாக பிரித்து எடுத்து, வீட்டில் எலி இருக்கும் இடங்களில் வைத்து விடலாம். குறிப்பாக, அடுப்பின் அடிப்பகுதி, துணி இருக்கும் பகுதிகள், ஜன்னல் ஓரங்கள் என அனைத்து இடங்களிலும் வைக்கலாம்.
இதனை எலிகள் சாப்பிடுவதால் அவற்றுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் இருக்கும் எலிகள் வெளியே சென்று விடுகின்றன. இவ்வாறு எலி தொல்லையில் இருந்து சுலபமாக தப்பித்துக் கொள்ள முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“