சீசன் மாற மாற வீடுகளில் கொசு தொல்லை அதிகரிக்கும். என்னதான் கொசு கடிக்க கூடாது என்று கொசுவலை, கொசு பேட், ஊதுபத்தி போன்றவற்றை பயன்படுத்தினாலும் கொசுக்களை வீட்டில் இருந்து ஒழிக்க முடியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? அப்போ வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்து இந்த ஈஸியான டிப்ஸ்களை செய்து பாருங்கள். வீட்டில் ஒரு கொசு கூட தங்காது.
Advertisment
அதை எப்படி செய்வது என்று கோமுஸ் லைஃப்ஸ்டைல் யூடியூப் பக்கத்தில் கொசுவை விரட்ட அருமையான ஐடியா கூறியிருப்பது ஒன்றை பற்றி பார்ப்போம்.
கொசுக்கடி என்பது மிகவும் டேஞ்சரஸ் ஆன ஒன்றுதான். கொசு கடித்தால் தழும்பாகிவிடும், காய்ச்சல் வந்துவிடும், வலி எடுக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் கொசு வராமல் எப்படி தடுப்பது என்று யாருக்கும் தெரிவதில்லை. எப்படி கொசு வராமல் தடுப்பது என்று பார்ப்போம்.
டிப்ஸ் 1: வீட்டில் இருக்கும் டானிக் டப்பாவை எடுத்து அதன் மூடியில் ஒர் ஓட்டை போட்டுக் கொள்ளவும். பின்னர் அந்தப் பாட்டில் வேப்ப எண்ணெய் ஊற்றி, கற்பூரத்தை உடைத்து போட்டு திரி போட்டு விளக்கு ஏற்றலாம்.
Advertisment
Advertisements
வீட்டில் இந்த மாதிரி விளக்கேற்றுவதன் மூலம் கொசு வராது கொசுவிற்கு கற்பூரம் பிடிக்காது. அதேபோல வேப்ப எண்ணையும் கசந்தன்மையுடன் இருக்கும். எனவே இவை இரண்டையும் சேர்த்து விளக்கு ஏற்றும் போது அந்த வாசத்திற்கே கொசு வராது, கொசுவை எளிதில் வீட்டிலிருந்து விரட்டிவிடலாம்.
டிப்ஸ் 2: அதேபோல கொசுவை விரட்ட இன்னொரு டிப்ஸ் என்னவென்று பார்த்தால் ஒரு தட்டில் கற்பூரத்தை போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கலாம் அப்படி செய்தாலும் கொசு கடிக்காது.