/indian-express-tamil/media/media_files/uyYNCuTuQTyM6NoYOmPh.jpg)
How to get rid of mosquitoes
கொசுக்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவை கடித்தால் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கொசுக்கள் பெருகும் இடமாக இருப்பதால், உங்கள் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகில் குப்பைகள் மற்றும் தண்ணீர் தேங்குவதை அனுமதிக்கக் கூடாது.
இந்த கொடிய பூச்சிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்கவும் சில இயற்கை வழிகள் இங்கே உள்ளன.
வெங்காயம், கடுகு எண்ணெய், சாம்பிராணி மட்டும் கொண்டு நீங்களே வீட்டில் ரசாயனமில்லாத இயற்கையான கொசு விரட்டி தயாரிக்கலாம்.
எப்படினு பாருங்க?
முதலில், ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும். இதில், ஒரு ஸ்பூன் கெட்டி சாம்பிராணி பொடியை கலக்கவும். இரண்டு நிமிடம் சூடானதும் அடுப்பை அணைக்கவும்.
இப்போது ஒரு வெங்காயத்தை எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டி சிறிய உரலில் போட்டு இடித்து கரடுமுரடாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதில் ஏற்கெனவே காய்ச்சிய கடுகு எண்ணெய்யை ஊற்றி, நன்கு கலந்து ஜன்னல் ஓரம், வீடு வாசல், வீட்டுக்குள் கொசு நுழையும் இடங்களில் வைக்கவும். இப்படி செய்தால், கொசு உங்கள் வீட்டுக்குள் வராது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.