எலுமிச்சை தோலை துருவி, உருளைக்கிழங்கில் இப்படி வைங்க… எலி உங்க வீட்டுப் பக்கம் வராது!
வீட்டில் எலித் தொல்லை என்பது பலருக்கும் தலைவலியாக இருக்கலாம். எலிகளைப் பிடிக்கப் பல வழிகள் இருந்தாலும், இயற்கையான முறையில், வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி எலிகளை விரட்டுவது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை
பேக்கிங் சோடா (ஆப்பச்சோடா)
மிளகாய்த்தூள்
உருளைக்கிழங்கு
எலிகளை விரட்டும் முறை:
Advertisment
Advertisements
முதலில், ஒரு எலுமிச்சையின் தோலை மட்டும் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சைச் சாறு தேவையில்லை; அதன் தோலில் இருக்கும் வாசம் மட்டுமே இந்த முறைக்கு முக்கியம். துருவிய எலுமிச்சைதோலுடன், சுமார் அரை ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். எலிகளுக்கு எலுமிச்சையின் வாசம் மிகவும் பிடிக்கும் என்பதால், இந்தக் கலவையை அவை நிச்சயம் சாப்பிடும். ஒரு உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, அதன் உள்ளிருக்கும் சதையைச் சிறிது நீக்கி, அதற்குள் நாம் தயாரித்து வைத்துள்ள எலுமிச்சை தோல் கலவையை நிரப்பவும். பின்னர், உருளைக் கிழங்கிலிருந்து எடுத்த சதையை வைத்தே இந்தக் கலவையை மூடிவிடவும்.
இந்த உருளைக்கிழங்கு கலவையின் வாசம் எலிகளை வெகுவாக ஈர்க்கும். உங்களுக்கு எலித் தொல்லை எங்கு அதிகமாக இருக்கிறதோ, அதாவது சமையலறை, சேமிப்பு அறைகள் போன்ற இடங்களில் இந்தக் கலவையை எடுத்து வைக்கவும். எலி இந்தக் கலவையைச் சாப்பிட்டால், அதன் பிறகு உங்கள் வீட்டுப் பக்கமே வராது.