வீட்டில் கொசுக்களின் தொல்லை மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும். குறிப்பாக, கிட்சனில் இவற்றின் தொல்லை அதிகமாக இருக்கும். இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என தற்போது காணலாம்.
அகல் விளக்கில் கற்பூரங்களை சிறிய துண்டுகளாக உடைத்து போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர், இதில் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். இந்த விளக்கு அணையும் வரை கற்பூர வாசனை நிறைந்திருக்கும். இந்த வாசனைக்கு கொசுக்கள் வராது.
இதேபோல், பாதி எலுமிச்சை பழமும், கிராம்பும் எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழத்தில் கிராம்புகளை குத்தி வைக்க வேண்டும். பின்னர், இந்த எலுமிச்சையை பழக்கூடையில் வைத்தால் அங்கும் கொசுக்கள் வராது.
மேலும், யூகளிப்டஸ் ஆயில் சிறிது அளவு எடுத்து, அத்துடன் தண்ணீரை சேர்த்து நன்றாக குலுக்க வேண்டும். பின்னர், இதனை வீட்டில் கொசு இருக்கும் பகுதிகளில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இவை கொசுக்களை பெருமளவு விரட்டி விடும்.
துளசியின் வாசனைக்கும் அதிகளவிலான கொசுக்கள் வராது. எனவே, துளசி இலைகளையும் வீட்டிற்குள் கொசுக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் வைத்து விடலாம்.
ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும். இத்துடன் ஆப்பிள் சிடார் வினிகர் கொஞ்சம் சேர்க்க வேண்டும். மேலும், பாத்திரம் கழுவ பயன்படும் சோப் திரவத்தையும் இதில் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலக்கி வைத்தால், இதன் வாசனைக்கும் கொசுக்கள் வராது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“