Advertisment

சில நொடிகளில் வாட்ஸ் ஆப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி?

மத்திய சுகாதார அமைசர் மன்சுக் மாண்டவியாவின் அலுவலகம் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை பகிர்ந்துள்ளது. அதில் அவர், “இப்போது மைகோவ் கொரோனா ஹெல்ப் டெஸ்க் மூலம் 3 எளிய படிகளில் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழைப் பெறுங்கள்” என்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
How to get your Covid vaccination certificate on WhatsApp, வாட்ஸ் ஆப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் , கோவிட் தடுப்பூசி சான்றிதழ், வாட்ஸ் அப்பில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ், Covid vaccination certificate, WhatsApp, Uninon Health Minister Mansukh Mandaviya, covid certificate number 91 9013151515, covid certificate, india, covid 19 india

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை இப்போது சில நோடிகளில் வாட்ஸ் அப் மூலம் உங்கள் போனிலேயே பெற்றுக்கொள்வதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழி செய்துள்ளது.

Advertisment

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் சுகாதார அமைச்சக அலுவலகம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதாரண மக்களின் வாழ்கையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே தங்கள் நாடுகளுக்குள் அனுமதிக்கிறது. பல அலுவலகங்களும் தங்கள் ஊழியர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன. அப்படி, தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கேட்டு சுகாதார நிலையங்களுக்கு செல்லத் தேவையில்லை. அங்கே காத்திருக்கத் தேவையில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை இப்போது சில நோடிகளில் வாட்ஸ் அப் மூலம் உங்கள் போனில்யே பெற்றுக்கொள்வதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழி செய்துள்ளது.

மத்திய சுகாதார அமைசர் மன்சுக் மாண்டவியாவின் அலுவலகம் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை பகிர்ந்துள்ளது. அதில் அவர், “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதாரண மக்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்துகிறது. இப்போது மைகோவ் கொரோனா ஹெல்ப் டெஸ்க் மூலம் 3 எளிய படிகளில் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழைப் பெறுங்கள்” என்ற தலைப்பில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "மக்கள் வாட்ஸ்அப்பில் COVID19 தடுப்பூசி சான்றிதழை நொடிகளில் பெறலாம் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். மன்சுக் மாண்டவியாவின் அலுவலகம், ட்விட்டரில் குறிப்பிடுகையில், “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதாரண மனிதனின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்துகிறது” என்ற தலைப்பில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளது. இப்போது கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை மைகோவ் கொரோனா ஹெல்ப் டெஸ்க் மூலம் 3 எளிய படிகளில் பெறுங்கள்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வாட்சப்பில் பெறுவது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்ட் அல்லது ஐஓஎஸ் மொபைல் போனில் +91 9013151515 என்ற எண்ணை சேமியுங்கள்.

பின்னர் வாட்ஸ்அப்பில் ‘covid certificate’ என டைப் செய்து மேற்கண்ட என்னுக்கு அனுப்புங்கள்.

இதையடுத்து வரும் OTP-யை உள்ளீடு செய்யுங்கள். அவ்வளவுதான் நொடிகளில் வந்துவிடும் உங்களுடைய கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்.

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவல்லாவை தேசிய தலைநகரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) சந்தித்து, கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்குவது குறித்து விவாதித்தார்.

“நாங்கள் இங்கு பல நல்ல சந்திப்புகளை நடத்தினோம். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது பற்றி நாங்கள் விவாதித்தோம். ஐரோப்பாவில் 17-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே கோவிட்ஷீல்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளன, மேலும் பல நாடுகள் ஒப்புதல் அளிக்க வரிசையில் உள்ளன. நாங்களும் இதைப் பற்றி விவாதித்தோம். இது அனைத்து பயணிகளுக்கும் நல்ல செய்தியாக இருக்கும். நாங்கள் நம்முடைய மாணவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறோம்” என்று மன்சுக் மாண்டவியாவுடன் சந்திப்புக்குப் பிறகு ஆதார் பூனாவல்லா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment