உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வெற்றிலைக் கொடி வளர்க்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணால், வெற்றிலைக் கொடி செழிப்பாக வளரும், ஈசியாகவும் வளர்க்கலாம். அது என்ன டிப்ஸ் என்று பார்க்கலாம் வாருங்கள்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வெற்றிலைக் கொடி வளர்க்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணால், வெற்றிலைக் கொடி செழிப்பாக வளரும், ஈசியாகவும் வளர்க்கலாம். அது என்ன டிப்ஸ் என்று பார்க்கலாம் வாருங்கள்.
வெற்றிலைக் கொடியை செழிப்பாக வளர்க்க 5 டிப்ஸ்களை பசுமை தோட்டக்கலை (Pasumai Thottakalai) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம். Photograph: (YouTube/ @Pasumai Thottakalai)
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வெற்றிலைக் கொடி வளர்க்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணால், வெற்றிலைக் கொடி செழிப்பாக வளரும், ஈசியாகவும் வளர்க்கலாம். அது என்ன டிப்ஸ் என்று பார்க்கலாம் வாருங்கள்.
Advertisment
வெற்றிலை தாம்பூலம் தரிக்க, சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலம் அளிக்க பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை செரிமானத்துக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள். அதனால், பலரும் தங்களுடைய வீடுகளில் வெற்றிலைக் கொடி வளர்க்கிறார்கள். ஆனால், அந்த வெற்றிலைக் கொடி செழிப்பாக வளரவில்லை என்று சிலர் கவலைப்படுகிறார்கள். உங்களுக்காகவே வெற்றிலைக் கொடியை செழிப்பாக வளர்க்க 5 டிப்ஸ்களை பசுமை தோட்டக்கலை (Pasumai Thottakalai) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
உங்களுடைய வீட்டில் வெற்றிலைக் கொடி வளர்க்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ்களை பயன்படுத்துங்கள் உங்கள் வீட்டில் இருக்கிற வெற்றிலைக் கொடி சூப்பராக செழித்து வளரும்.
Advertisment
Advertisements
1.வெற்றிலைக் கொடியைப் பொருத்தவரை முழுவதுமாக வெளியில் வைக்க வேண்டும், அல்லது அரை நிழலில் வைத்து வளர்க்க வேண்டும். வீட்டுக்கு உள்ளே வைத்தால் வளரவே வளராது.
2.வெற்றிலைக் கொடி தொட்டிகளில் வைது வளர்ப்பதைவிட தரையில் வைத்து வளர்த்தால் ரொம்ப பெரிய அளவில் வளரும்.
3.வெற்றிலைச் செடியை செம்மண் கலவையில் நடவு செய்ய வேண்டும். செம்மண் கலவையில் கொஞ்சம் கோகோபிட் சேர்த்துக்கொள்ளலாம்.
4.வெற்றிலைச் செடிகளுக்கு ரசாயன உரம் எதுவும் பயன்படுத்த வேண்டாம். வீட்டில் கிடைக்கக்கூடிய மாட்டுச் சானத்தின் தொழு உரம். மன்புழு உரம் கிடைத்தால் மாதத்திற்கு ஒருமுறை வெற்றிலைச் செடிகளுக்கு கொடுங்கள். வெற்றிலைக் கொடி சூப்பராக வளரும்.
5.வெற்றிலைக் கொடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றால், இதற்கு காரணம் நைட்ரஜன் பற்றாக்குறை. வெற்றிலை மஞ்சள் நிறமாக இருந்தால், செடிக்கு மாட்டுச் சானம் தொழு உரத்தைக் கொடுப்பதன் மூலம் வெற்றிலை நல்ல பச்சையாக மாறும். முக்கியமான விஷயம் வெற்றிலைச் செடியை வெயிலில் வைத்தால் நிறம் மாறும். அதனால், அரை நிழலில் இருக்க வேண்டும்.