கொத்தமல்லி, நமது சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மூலிகை. உணவுக்குச் சுவையும் மணமும் கொடுப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. கடைகளில் வாங்கும் கொத்தமல்லியை விட, வீட்டிலேயே வளர்க்கும் கொத்தமல்லி மிகவும் பசுமையாகவும், சுவையாகவும் இருக்கும். அதை விரைவான வழியில் எப்படி வளர்ப்பது என்று பார்ப்போம்.
விரைவாக வளர்க்கும் முறை!
மல்லித்தழை வளர்க்க, முதலில் தரமான விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
முதலில், மல்லி விதைகளை எடுத்து, லேசாக நசுக்க வேண்டும். இதனால், விதை முளைக்கும் செயல்முறை விரைவாகும். நசுக்கிய விதைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு, மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இது விதைகளின் கடினத் தன்மையைக் குறைத்து, விரைவில் முளைக்க உதவும்.
ஒரு தொட்டியில், எல்லா வகைத் தாவரங்களுக்கும் ஏற்ற மல்டிபர்ப்பஸ் (multipurpose) கம்போஸ்ட் உரத்தை நிரப்பவும். மண்ணை நன்கு ஈரப்படுத்த வேண்டும், ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. ஊற வைத்த விதைகளை, ஈரமான மண்ணின் மேல் தூவ வேண்டும். பின்னர், விதைகளை ஒரு மெல்லிய மண் அடுக்கு கொண்டு மூடி விடலாம்.
முதல் மூன்று நாட்களுக்கு, தொட்டியை ஒரு செய்தித்தாளைக் கொண்டு மூடி வைக்கவும். இது விதைகளுக்குத் தேவையான ஈரப்பதத்தையும், இருளையும் கொடுத்து விரைவாக முளைக்க உதவும்.
வளர்ச்சிப் பயணம்!
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/04/13/4PMfEZs1gvsdxXwLJYFa.jpg)
மூன்று நாட்களுக்குப் பிறகு, விதைகளில் இருந்து சிறிய வெள்ளை நிற முளைகள் வெளியே வரத் தொடங்கும். இதுதான் செடியின் ஆரம்பம்!
முதல் வாரத்தில், சிறிய இலைகள் வெளிவரத் தொடங்கும். இரண்டு முதல் மூன்று வாரங்களில், செடி நன்கு வளர்ந்து, பச்சை இலைகளுடன் காணப்படும். ஒரு மாதம் கழித்து, மல்லித்தழை அறுவடைக்குத் தயாராக இருக்கும். செடியின் மேல் பகுதியை மட்டும் வெட்டி எடுத்தால், புதிய இலைகள் மீண்டும் வளரத் தொடங்கும்.
இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றி, உங்கள் வீட்டிலேயே புதிய, வாசனையான மல்லித்தழையை வளர்க்கலாம். இனி, உங்கள் உணவுகளில் ஃப்ரெஷ் மல்லித்தழை சேர்க்க, கடைக்குச் செல்ல வேண்டியதில்லை!