சமையலுக்குப் பயன்படுத்துகிற கொத்தமல்லி பயன்படுத்தி கொத்தமல்லி இலை வீட்டில் வளர்க்கலாம். இதை செய்ய முதலில் கொத்தமல்லி விதை எடுத்து அதை உடைத்துக் கொள்ள வேண்டும். முழு விதை எடுத்தால் செடி வளர நீண்ட நாள் ஆகும்.
Advertisment
மல்லி விதை 1-2 ஆக உடைத்து எடுக்கவும். இதை எடுத்த பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
இடையில் செடி வளர்க்க ஒரு மண் பானை எடுத்து அதில் மண் போடவும். இதன் பின் ஊற வைத்த மல்லி விதை எடுத்து மண்ணில் கொஞ்சமாக போடவும். மண்ணில் கோடு கிழித்து அதில் போடவும். அதன் பின் லேசாக மண் போட்டு மூடவும். செடிக்கு தினமும் தண்ணீர் கொஞ்சமாக தெளித்து விட்டால் போதும்.
Advertisment
Advertisements
சொட்டியில் எப்போதும் ஈரப்பதம் இருப்பதை பார்த்துக் கொள்ளவும், அதிக வெயில் தேவையில்லை. நிழலில் வைத்து கூட இந்த கொத்தமல்லியை வளர்க்கலாம். இவ்வாறு செய்தால் 10 நாளில் கொத்தமல்லி செடி வளரும். அதை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தி மகிழலாம்.