/indian-express-tamil/media/media_files/2025/10/13/download-46-2025-10-13-17-49-37.jpg)
வீட்டுத்தோட்டங்களில் அழகாக பூக்கும் செடியாய் மட்டுமல்லாமல், செம்பருத்தி செடி (Hibiscus plant) தமிழர்களின் பாரம்பரியத்தில் ஆன்மீகம், அழகு, மற்றும் மருத்துவத்துடன் நெருக்கமாகப் பின்னியுள்ள ஓர் அருமையான செடி. கோவில் வழிபாடுகளில் பூக்கள் அர்ப்பணிக்கப்படுவதோடு, பலவிதமான மருத்துவப் பயன்களும் கொண்டுள்ளது.
அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஒன்று – செம்பருத்தி
சாதாரணமாக வீடுகளில் நிழலைக் கொடுக்கும் செடியாகவே இது வைக்கப்படுகிறது. ஆனால், அதன் இலைகள், பூக்கள், இளஞ்செடி எல்லாம் மருத்துவ குணமிக்கவை. பஞ்சபூதங்களை சுமந்து, வீட்டில் சக்தி நிலையை சமநிலைப்படுத்தும் இயற்கை மூலிகை என்றும் கூறப்படுகின்றது.
செம்பருத்தி செடியின் முக்கிய நன்மைகள்:
1. மூட்டு வலிக்கு சிகிச்சை:
செம்பருத்தி இலைகளை அரைத்து தடவினால், மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறையும்.
2. முடி வளர்ச்சி மற்றும் அலோபீசியா (முடி உதிர்வு) தடுப்பு:
செம்பருத்தி பூவிலும் இலைகளிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள், தலைமுடிக்கு தேவையான ஆமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டவை. இவை கூந்தலுக்கு பசுமை, வலிமை தருகின்றன. இதனாலேயே பல ஹெர்பல் எண்ணெய்களில் செம்பருத்தி முக்கிய மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.
3. மூத்திரகோச பிரச்சனைகளுக்கு நிவாரணம்:
பூவின் சாற்றை சமைத்துக் குடிப்பதால், சிறுநீரக கோளாறுகள் மற்றும் பாதிப்பு குறையும்.
4. மாதவிடாய் கோளாறுகள்:
பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் கால வலி மற்றும் சீரமைப்பு பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூ தேநீர் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
5. பசிகுறைவு மற்றும் எடை குறைப்பு:
செம்பருத்தி பாகங்கள் சத்துக்களும், நார்ச்சத்தும் நிறைந்தவை. இது உடல் எடையை சமநிலைப்படுத்த உதவுகிறது.
6. தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி:
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், உடலில் இருந்து நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களைத் தடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளன.
அதை வளர்க்க ஒரு சிம்பிள் டிப்!
செம்பருத்தி செடியை வீட்டில் ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு முதலில் அந்த செடியின் இலைகளை வெட்டி எடுக்க வேண்டும். அதை வெட்டியா பின்பு கொஞ்சம் வெயிலில் வைத்து உரத்தை போட வேண்டும். அப்படி போட்ட பிறகு கொஞ்சம் அப்படியே தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்.
செம்பருத்தி செடியை தமிழர்கள் வீடுகளின் வடகிழக்கு மூலையில் (ஈசான்ய மூலை) நடுவது வழக்கம். இது பாரம்பரிய வாஸ்து விதிகளுக்கு ஏற்ப, நன்மை தரும் செடியாக பார்க்கப்படுகிறது. சிவபெருமானுக்கு பிடித்த பூவாகவும், விரத நாட்களில் பாவனை செய்யும் பூவாகவும் இந்த செடி ஒரு புனிதத்தன்மையை ஏந்தியுள்ளது.
அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும், ஆன்மீகத்திற்கும் மூன்று பரிமாணங்களிலும் செம்பருத்தி செடி நம்மைச் சுற்றி வளர்கிறது. வீட்டில் ஒரு செம்பருத்தி செடி இருந்தால், அது நம்மை நோய்களிலிருந்து காத்து, நம்மை புத்துணர்வுடன் வைக்கும் இயற்கையின் அருமை பரிசாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.