வெந்தயத்தில் உள்ள வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் உள்ளது. இதில் இரும்பு சத்து, மெக்னீஷியம், வைட்டமின் பி6 உள்ளது. ஆரோக்கியமான நன்மைகள் பல உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்டான பிளபாய்ட்ஸ் உள்ளது. இவை உடலை சேதத்திலிருந்து காப்பாற்றும். வெந்தயம் சாப்பிடுவதால், ரத்த சுகர் அளவு குறையும். கார்போஹைட்ரேட்ஸ் உணவை மெதுவாக உள்வாங்கிக்கொள்ளும்.
நாம் உணவு சாப்பிடுவதற்கு முன்பு, வெந்தயத்தை எடுத்துகொண்டால், ரத்த சுகர் அளவு சீராக வைத்துகொள்ள உதவும். மேலும் வெந்தயம் ஜீரணத்திற்கு உதவும். மேலும் இது வயிறு தொடர்பான செயல்பாடுகளை சீராக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. ஜீரணத்திற்கு தேவையான என்சைம் சுரக்க உதவும். இந்த என்சைம் உணவை உடைக்க உதவும். இதனால் வயிறு உப்புதல் மற்றும் அஜீரணம் ஏற்படாது. இவை கொலஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் வயதாவதை தடுக்கும்.
இது தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும். கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும். மேலும் நமது பசி தொடர்பாக சீராக இருக்க உதவும். ஆரோக்கியமான நபர் ஒருவர் வெந்தய பவுடரை 8 முதல் 10 கிராம் என்று 2 முறை சாப்பிடலாம். இரவு முழுவதும் வெந்தயத்தை ஊற வைத்து அதை நாம் எடுத்துகொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“