Advertisment

விந்து அணு எண்ணிக்கையை விட குவாலிட்டி முக்கியம்; அதற்கு இந்த உணவுகள்..!' டாக்டர் சுகன்யா

விந்து அணு ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவு வகைகள் பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
New Update
The chubby womens satisfy the partner What does medicine say

விந்து அணு  எண்ணிக்கை மற்றும் அதன் குவாலிட்டி பற்றி மகப்பேறு மருத்துவர் சுகன்யா விளக்குகிறார். கணவன், மனைவி ஒருவருடம்  உடல் உறவில் ப்ரோடெக்ஷன் பயன்படுத்தாமல் இருக்கும் போது குழந்தை உருவாகவில்லை என்றால் ஆணுக்கு சமன் அனாலிசிஸ் செய்யப்படும். இது பொதுவானது தான். அப்போது குறைந்தது 15 மில்லியன் விந்து இருக்க வேண்டும்.  அதிகபட்சம் 200  மில்லியன் இருக்கலாம்.  15 மில்லியனுக்கும் குறைவாக இருந்தால் அது லோ கவுன்ட் என்று சொல்லப்படும். விந்து அணு எண்ணிக்கையை விந்து அணுவின் குவாலிட்டி தான் முக்கியம். 

Advertisment

ஓவம் ஃவெர்டிசைஸ் செய்ய ஒரு விந்து அணு போதும்.  பெண்களுக்கு ஓவுலேசன் நடக்கும் முந்தைய நாள்  அல்லது அடுத்த நாள் உடல் உறவில் இருந்தால் கருத்தரித்தல் நடைபெறும். இதற்கு ஆணின் ஆரோக்கியமான ஒரு விந்து அணு கூட போதும். சமனில் உள்ள விந்தணுவின் குவாலிட்டி தான் மிகவும் முக்கியமானது. விந்து அணு ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி, பிசிக்கலாக ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும். 20-40 நிமிடங்கள் 
உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இது விந்து அணு ஆரோக்கியமாக இருக்க உதவும். 

அடுத்து உணவு கட்டுப்பாடு தேவை. ஆரோக்கியமான உணவு வகைகள் பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். விந்து அணுக்கு தேவையான மைக்ரோ நியூட்டிரியன்ட் சத்து கொண்டு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஜிங்க், விட்டமின் சி.டி உணவுகளை சாப்பிட வேண்டும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment