மாதவிடாய் தள்ளி போகிறதா? காலையில் இந்த கசாயம் குடிங்க; டாக்டர் ஜெயரூபா
நம் பாரம்பரியத்தில் சொல்லப்பட்ட ஓர் ஆயுர்வேத கசாயம் உங்கள் ஹார்மோன்களை இயற்கையாக சமநிலைப்படுத்தி, மாதவிடாய் சுழற்சி சீர்படுத்த உதவும். இது பக்க விளைவு எதுவும் ஏற்படுத்தாமல் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
நம் பாரம்பரியத்தில் சொல்லப்பட்ட ஓர் ஆயுர்வேத கசாயம் உங்கள் ஹார்மோன்களை இயற்கையாக சமநிலைப்படுத்தி, மாதவிடாய் சுழற்சி சீர்படுத்த உதவும். இது பக்க விளைவு எதுவும் ஏற்படுத்தாமல் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். ஒரு சில நாட்கள் முன் (அ) பின், அதாவது 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது இயல்பானதாகும்.3 அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களுக்கு மாதவிடாய் உண்டாகாமல் இருத்தல். வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமான அல்லது மிகக் குறைவான உதிரப்போக்கு ஏற்பட்டால் அது சீரற்ற மாதவிடாய் ஆகும்.
Advertisment
சீரற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
ஹார்மோன் கோளாறுகள், தைராய்டு இயக்கம் சீராக இல்லாமை, சினைப்பை நோய்க்குறி (PCOS), கர்ப்பப்பை கோளாறுகள், அதீத உடற்பயிற்சி, சத்தான ஆகாரம் உண்ணாமை, அதிக (அ) குறைவான உடல் எடை, மன அழுத்தம், மாதவிலக்கு நிற்கும் காலம் (menopause), உணவுக் குறைபாடு, சில வகையான மருந்துகள், சில உடல் நலக் கோளாறுகள் ஆகியன ஆகும்.
ஓமம் எனும் ஒப்பற்ற மருந்து!
Advertisment
Advertisements
சமையலில் சேர்க்கும் ஓமத்திற்கு மணம் மட்டுமின்றி மருத்துவ குணங்களும் உண்டு. அதை சமைத்து சாப்பிட்டு மருத்துவ பயன்கள் பெறலாம். நீரை கொதிக்க விட்டு அதில் ஓமம், புதினா, எலுமிச்சை சாறு சிறிது கலந்து இந்துப்பு சிறிதளவு சேர்த்து வடிகட்டி குடித்தால் ஜீரண சக்தி கிடைக்கும். சளி, இருமல் தீரும். வெற்றிலையில் ஓமம் வைத்து, மென்று தின்றால் வாயு கோளாறு தீரும்.
ஓமம் + பெருங்காயம் கசாயம் எப்படி தயாரிப்பது?
சீரற்ற மாதவிடாய் பிரச்னைகள் தீர ஓமம்-பெருங்காயம் கசாயம் பருகலாம் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா
தேவையான பொருட்கள்:
ஓமம் – 1 டேபிள்ஸ்பூன் (5 கிராம்)
கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு
தண்ணீர் – 4 டம்ளர் (750 மில்லி)
ஒரு கடாயில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் 5 கிராம் ஓமம் சேர்த்து அதனுடன் சிறிய துண்டு கட்டி பெருங்காயம் போட்டு கொத்திக்க விட வேண்டும். ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி வடிகட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். காலை, இரவு என 2 வேளைகளிலும் உணவிற்கு முன்பு இதனை பருக வேண்டும். இவ்வாறு செய்வதால், 3 அல்லது 5 நாட்களில் மாதவிடாய் ஏற்படும் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.