வர்றவர்ற வெயில் ரொம்ப அதிகமாகிட்டே போகுது. பகல்லதான் வீட்டு விட்டுக்கூட வெளிய போக முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துதுனா, ராத்திரி அதுக்குமேல சூடா இருக்கு. ஃபேன் போட்டாக் கூட அனல் காத்துதான் வருது.
Advertisment
நம்ம வீட்டுலயே ஏ.சி. இல்லயேனு நீங்க கவலைப்பட வேண்டாம். இந்த கொளுத்துற வெயிலயும் உங்க பெட்ரூம ஏ.சி. இல்லாமலே கூலிங்கா வச்சுக்க ஒரு சூப்பர் சீக்ரெட்
இந்த வீடியோ பாருங்க
Advertisment
Advertisements
இதேமாதிரி உங்க வீட்டுல ஏதாவது மண்சட்டி இருந்தா அதுல தண்ணீர் நிரப்பி ஃப்ரீசர்ல வச்சுக்கோங்க. உங்ககிட்ட மண்சட்டி இல்லனாலும் பரவால்ல. ஏதாவது ஒரு அகலமான பாத்திரம் எடுத்துக்கலாம்.
இப்போ நைட் தூங்கும் போது ஃபிரீசர்ல வச்சிருந்த தண்ணீர் நல்ல ஐஸ் கியூப்ஸா ஆகிருக்கும். இதை டேபிள் ஃபேன் முன்னாடி, ஒரு தட்டுமேல வச்சுக்கோங்க.
அப்படியே ஒரு தட்டு அல்லது டவல் மேல வச்சு ஒரு டேபிள் ஃபேன் அல்லது சீலிங் பேன் போடுங்க. அப்படியே இந்த காத்து ஐஸ்ல பட்டு, ஐஸ் நல்ல உருகும் போது ரூம் ஜில்லுனு இருக்கும்.
உங்க வீட்டுல ரொம்ப சூடா இருக்கா? இன்னைக்கே இந்த டிரிக் டிரை பண்ணுங்க.