ஏ.சி இல்லாமல் வீடு கூலாக இருக்க... ஃபேனுக்கு கீழ இப்படி ஐஸ் வச்சு; ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க!
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை ஏசி பொருத்தாமலே, குளுமையாக வைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அவற்றில் சிலவற்றைப் பார்போம். இதில் அதிக சிரமமும் இல்லை, செலவினமும் இல்லை.
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை ஏசி பொருத்தாமலே, குளுமையாக வைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அவற்றில் சிலவற்றைப் பார்போம். இதில் அதிக சிரமமும் இல்லை, செலவினமும் இல்லை.
கோடை வெயில் எல்லோரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வெளியே சென்றால் அனல் அடிக்கிறது என்று நினைக்கும் போது, வீட்டில் இருந்தால் கூட அதன் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இப்படி இருக்கும் போது அனைவரது வீட்டிலும் ஏ.சி வாங்குவது சாத்தியம் கிடையாது. அந்த வகையில், வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஏசி போன்ற குளிர்ச்சியான காற்றை வர வைக்கலாம். எப்படி என்று பார்ப்போம்..
Advertisment
வெப்பமாக இருக்க முதல் காரணமே மின்விசிறி தான்:
வீடு வெப்பமாக இருப்பதற்கு முதல் காரணமே மின்விசிறி தான். மின்விசிறியில் இருந்து காற்று வந்தாலும், அது வெப்பக் காற்று தான். பகல் முழுவதும் வெயிலில் மொட்டை மாடி உள்ளது. மின்விசிறி போடும் போது, மொட்டை மாடியில் உள்ள வெப்பம் மிகவிரைவாக தரையிறங்குகிறது. இதனால்தான் இரவு நேரத்தில் மொட்டை மாடி குளிராக இருந்தாலும், வீட்டு அறையினுள் சூடாக உள்ளது. எனவே, முதலில் மொட்டை மாடியில் வெயில் நேரடியா படுவதை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு மொட்டை மாடி முழுவதும் தற்காலிகமாக வெள்ளை சுண்ணாம்பு அடிப்பது ஒரு சிறந்த வழியாகும். குறைந்த விலையில், வெப்பத்தை கட்டுப்படுத்த பிரத்யேகமாக பெயிண்ட் கிடைக்கிறது. அதிலும் வெள்ளை பெயிண்ட் அடித்தால், வெயிலை பிரதிபலித்து விடும். இதனால் வெப்பம் தரையிறங்காமல் கட்டுப்படுத்தப்படுகிறது.
மின்விசிறிக்கு கீழே ஐஸ் கட்டிகள்:
Advertisment
Advertisements
முடிந்த அளவு சீலிங் மின்விசிறிக்குப் பதிலாக, மேசை மின்விசிறியைப் பயன்படுத்தலாம். இதனால், ஜன்னலில் இருந்து வரும் இயற்கையான காற்றை நமது பக்கம் திருப்ப முடியும். டேபிள் பேன் பின்புறத்தில், சற்று தொலைவில் வாளி நீரை வைத்தால், இன்னும் குளிர் காற்று கிடைக்கும். சீலிங் மின்விசிறியைப் பயன்படுத்தும் போது, அதன் கீழே சிறிய சிறிய அளவில் ஐஸ் கட்டிகள் வைக்கும்போது அதன் மேல் காற்று பட்டு குளிர் காற்று கிடைக்கும். இதே போல் இரவில் உறங்குவதற்கு முன்பு, படுக்கும் தரையில் சிறது நீர் தெளிக்கலாம். ஈர துணிகளை சிறிது நேரம் விரித்து வைத்திருக்கலாம். இதனால், படுக்கும் போது தரை குளிர்ச்சியாக இருக்கும்.
ஜன்னலில் , சுவற்றில் ஈரத் துணி:
வீட்டில் பழைய போர்வை இருந்தால், அதை தண்ணீரில் நனைத்து, ஜன்னலில் தொங்க விடலாம். இதனால் ஜன்னலின் வெளிப்புறத்தில் ஆவியாதல் நடக்கும். இயற்பியல் விதிப்படி, ஒருபுறம் ஆவியாதல் நடந்தால், மறுபுறம் குளிராவுதல் நடக்கும். எனவே, ஜன்னலில் ஈரமான போர்வை, துணிகளை தொங்க விடுவதன் மூலம் அறை முழுவதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். இதே போல் வீட்டு சுவற்றில் ஆணிகள் இருந்தால், அதிலும் தொங்க விடலாம்.