/indian-express-tamil/media/media_files/2025/07/02/cockroach-lizard-xy-2025-07-02-07-44-44.jpg)
வீடுகளில் இருந்து கரப்பான் பூச்சி, பல்லியை விரட்ட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கோமு லைஃப்ஸ்டைல் (Gomu's Lifestyle) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். Photograph: (Gomu's Lifestyle)
வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி தொல்லை தாங்கமுடியவில்லையா, இனி கவலையே படாதீர்கள் காலாவதியான ஒரு மாத்திரை, 7 மிளகு இருந்தால் போதும் கரப்பான் பூச்சி, பல்லியை வீட்டை விட்டு விரட்டிவிடலாம், அது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
பொதுவாக பெரும்பாலான வீடுகளில் கரப்பான் பூச்சி, பல்லி தொலை இருக்கவே செய்கிறது. இந்த கரப்பான் பூச்சி, பல்லியை விரட்ட கடைகளில் இருந்து ஸ்பிரே வாங்கிக்கொண்டு வந்து பயன்படுத்துகிறோம். இது குழந்தைகள் இருக்கும் வீட்டில் பயன்படுத்தினால் ஆபத்தானது, எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். சிலருக்கு அந்த ஸ்பிரேவின் நெடி ஒத்துக்கொள்ளாது. மூச்சுத் திணறல் மற்றும் அலர்ஜி ஏற்படும். அதுமட்டுமில்லாமல், இந்த ஸ்பிரேக்களை வாங்குவதால் பணமும் செலவாகிறது. அதனால், வீடுகளில் இருந்து கரப்பான் பூச்சி, பல்லியை விரட்ட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கோமு லைஃப்ஸ்டைல் (Gomu's Lifestyle) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர்.
வீடுகளில் இருந்து கரப்பான் பூச்சி, பல்லியை விரட்ட வேண்டும் என்றால், காலாவதியான மாத்திரை ஒன்று, 7 மிளகு, ஒரு மூடி டெட்டால், கால் டீஸ்பூன் காபி தூள் இருந்தால் போதும்.
முதலில் ஒரு பவுல் எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள் வீட்டில் காலாவதியான மாத்திரை அல்லது தேவையில்லாத காய்ச்சல் தலைவலி மாத்திரை ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாகப் பொடி செய்து சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து 7 மிளகு எடுத்து அதை நன்றாக பொடி செய்து சேர்த்துக்கொள்ளுங்கள், அடுத்து ஒரு அரை மூடி டெட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன் காபி தூள் ஒரு கால் ஸ்பூனுக்கும் குறைவாக எடுத்து சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்குங்கள். இந்த கரைசலை ஒரு ஸ்பிரேவில் ஊற்றி, கரப்பான் பூச்சி, பல்லி நடமாட்டம் உள்ள இடங்களில் ஸ்பிரே செய்யுங்கள்.
அதே போல இந்த கரைசலில் டிஷ்யூ பேப்பரை சின்ன துண்டுகளாக நனைத்து உருட்டி கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடங்களில் வைத்துவிடுங்கள். இப்படி ஒரு வாரம் செய்தால் போதும் கரப்பான் பூச்சி, பல்லி உங்கள் வீட்டுப் பக்கமே வராது. இதை உங்கள் வீட்டில் டிரை பண்ணி பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.