தேங்காய் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தேங்காயில் வலிமையான ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உள்ளன. இவை குடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றிவிடும். எனவே தினமும் காலை உணவின் போது 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காய் சாப்பிட்ட 3 மணிநேரத்திற்கு பின், 375 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள்.
பூண்டில் ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உள்ளன. இது அனைத்து வகையான குடல் புழுக்களையும் அழிக்க உதவும். மேலும் பூண்டில் சல்பர் அதிக அளவில் உள்ளது. பூண்டில் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இருந்து நுண்ணுயிரிகளை நீக்க உதவும். குடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால், மலப்புழையில் கடுமையான அரிப்பை சந்திக்க நேரிடும். அந்நேரத்தில் பூண்டு பற்களை அரைத்து, வேஸ்லின் சேர்த்து மலப்புழையைச் சுற்றி தடவுங்கள். இதனால் மலப்புழையில் உள்ள புழுக்களின் முட்டையை அழித்து, அரிப்பைக் குறைக்கும். மேலும் தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம், புழுக்களில் இருந்து விடுபடலாம்.
ஆயுர்வேதத்தில் குடல் புழுக்களை அழிக்க பப்பாளி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் முக்கியமான நொதிப் பொருள் தான் காரணம். ஆகவே பப்பாளிக் காயை துருவி சாறு எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 2 மணிநேரம் கழித்து, 250 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறும்.