Weight Loss Tips In Tamil: இன்றைய காலங்களில் உடல் எடையைக் குறைப்பதற்காக நாம் எவ்வளவோ முயற்சியை
மேற்கொள்கிறோம். ஜிம்மிற்கு செல்வதும் ,சப்ப்ளிமெண்ட்ஸ் எடுப்பதும், நடை பயிற்சிகள் மேற்கொள்வதும் என நம்மால் முடிந்த, நமக்குத் தெரிந்த ஆயிரம் முயற்சிகளை நாம் கைவிடுவதாய் இல்லை. ஒவ்வொரு முயற்சிகளும் வெவ்வேறு பலன்களைத் தருகிறது. ஆனால், எல்லா முயற்சியும் நம்மில் தஞ்சம் அடைந்திருக்கும் தீய கொழுப்பு சத்தை அகற்றுவதற்க்கே ! என்பது எதார்த்த உண்மை.
நமது உணவு பழக்கத்தால் உருவாகும் இந்த கொழுப்பு தொப்பையாய் மட்டும் இல்லாமல் உடம்பில் பல பகுதிகளில் ஒட்டிக்கொண்டு பின்னப்பட்டிருந்தால்,நாம் நமது உடம்பைக் குறைக்கும் முயற்சி மிகவும் சிக்கலாகிவிடுகிறது. நாம் என்னதான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தாலும், பார்க்கில் வியர்வை சிந்தி விடிய விடிய நடந்தாலும் இந்த இரண்டாவது முறையில் அமைந்திருக்கும் கொழுப்பை அகற்றுவது மிக மிக கடினம். இந்த இடத்தில் தான் நமக்குக் கைகொடுக்கிறது இந்த வெள்ளரிக்காய் .
வெள்ளரிக்காயைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள்:
வெள்ளரிக்காயின் அறிவியல் பெயர் Cucumin Sativus என்பதாகும். தெற்கு ஆசியாவில் தான் முதலில் வெள்ளரியை சாகுபடி செய்தனர் . ஆனால், மக்களிடையே ஏற்பட்ட கலாச்சார பரிமாற்றத்தின் விளைவாய் இன்று வெள்ளரிக்காய் பல நாட்டு மூலைகளிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது . அன்றிலிருந்து இன்றுவரை வெள்ளரிக்காய் ஏழைகளுக்கு மட்டும் மருத்துவனாய், கேட்ட நேரத்தில் கிடைக்கும் உணவாய் இருக்கிறது.
ஆனால் இன்று வெள்ளரிக்காய் சிட்டி மக்களிடமும், வசதிப்படைத்தவர்களுக்கும் ஒரு அடிப்படை உணவாய் மாறிவிட்டன. காரணம், வெள்ளரிக்காய் உடல் எடையைக் குறைக்கிறது என்ற விழிப்புணர்வு இன்று பெரும்பாலான மக்களுக்கு வரத் தொடங்கிவிட்டன .
வெள்ளரிக்காயில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால்
மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையைக் கணிசமாய் குறைக்கின்றன . "நார்ச்சத்து பொருந்திய வெள்ளரியை உட்கொள்வதால் உங்களுக்கு அடிக்கடி பசியெடுக்காது. குறைந்த உணவில் உங்களால் அதிக நேரம் தெளிவாய் வேலை செய்ய முடியும் . இதனால் கண்ட நேரங்களில் அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், வெள்ளரிக்காயில் குறைந்த கொழுப்பு இருப்பதால் அவை உடல் எடை இழப்புக்கு ஏற்றதாக அமைகின்றன .