சில பேருக்கு உதடுகள் வெடித்தும் உதட்டின் தோல்கள் பெயர்ந்து வருவதைப் பார்க்கலாம். இது உடல் சூட்டின் காரணமாக வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இது வலியையும் ஏற்படுத்தும்.
இந்த உதடு வெடிப்பை போக்க, சிறந்த வீட்டு வைத்தியம் உண்டு.
அதாவது, 3-4 நாட்களுக்கு இரவு தூங்குவதற்கு முன் நெய்யை உதட்டில் தடவி வந்தால் பலன் கிடைக்கும்.
முழு உடல் அழகிற்கு கைகள், முகம் மற்றும் உதடு என தனித்தனியே கவனம் செலுத்த வேண்டும்.
மென்மையான உதடுகளை பெற வேண்டுமென்றால் போதுமானவரை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். உங்கள் உதடு கறுப்பாக, வறண்டும் வெடித்தும் காணப்படுகிறதென்றால் நிச்சயமாக உதட்டின் அழகை பாரமரிப்பது அவசியம் ஆகிறது.
இந்நிலையில், உதட்டில் வெடிப்பு வராமல் பாதுகாக்க, பாதாம் எண்ணெய் மூலமாக 2-3 மூன்று மசாஜ் செய்து வந்தால் உடனடியான மாற்றங்களை காணலாம்.
இப்போது உதட்டிற்கான ஸ்க்ரப்பை வீட்டிலே செய்யவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
5 மி.லி வெண்ணிலா எஸன்ஸ்
50 கிராம் தேன்
5 மி லி ரோஸ் வாட்டர்
20 கிராம் அல்லது 4 டீஸ்பூன் சர்க்கரை
செய்முறை
5 மி.லி வெண்ணிலா எஸன்ஸ், 50 கிராம் தேன், 5 மி லி ரோஸ் வாட்டர், 20 கிராம் அல்லது 4 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதில் டீ ஸ்பூனில் பாதியை எடுத்து உதட்டில் ஸ்க்ரப்பாக தேய்க்கவும். தேனில் உள்ள மாய்ஸ்ரேசர் மற்றும் சர்க்கரை உதட்டை மிருதுவாக்குகிறது. ரோஸ் வாட்டர் உதட்டை மென்மையாக பாதுகாக்கிறது. அனைத்தும் கலந்த இது உதட்டின் அழகை மேம்படுத்த உதவுகிறது.
வெடித்த உதடுகளுக்கு
பலருக்கும் உதடுகள் வெடித்தும் உதட்டின் தோல்கள் பெயர்ந்து வருவதைப் பார்க்கலாம். இதற்கு இரவு தூங்குவதற்கு முன் நெய்யை உதட்டில் தடவ வேண்டும். காபி, டீ போன்றவற்றை சூடாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கறுப்பான உதடுகளுக்கு
கறுப்பான உதடுகள் உள்ளவர்கள், அடர்த்தியான லிப் ஸ்டிக்கை போட்டுக் கொள்வது வழக்கம். எப்போதும் லிப்ஸ்டிக்குடன் இருப்பதை தவிர்த்து விடுங்கள். சுத்தமான சருமம் தான் ஆரோக்கியமானது.
கறுப்பான உதடுகளுக்காக..
பாதாம் எண்ணெய் - 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை
பாதாம் எண்ணெய் - 3 டீஸ்பூன் மற்றும் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் இந்த இரண்டு எண்ணெய்யையும் நன்றாக கலந்து ஒரு நாளில் அடிக்கடி இதைத் தடவி வர வேண்டும்.
லிப் மாஸ்க் போட்டு வந்தாலும் டார்க்கான உதடுகள் லைட்டனாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 டே.ஸ்பூன் உருளைக் கிழங்கு துருவியது
2 டே.ஸ்பூன் பாதாம் பேஸ்ட்
1 டீ.ஸ்பூன் - ஃப்ரஸ் க்ரீம்
1/2 டீ. ஸ்பூன் - எலுமிச்சை சாரு
செய்முறை
மேற்குறிப்பிட்ட பொருட்களை நன்றாக கலந்து உதட்டில் தடவி வர வேண்டும்.
10 நிமிடங்களுக்குபின் வெதுவெதுபான தண்ணீரால் துடைத்து எடுக்கவும்.
இதை வாரத்தில் 2-3 முறை பயன்படுத்தவும். மேலும் உதட்டைச் சுற்றிலும் உள்ள கறுப்பை நீக்க, உதட்டை நாக்கினால் துலாவில் எச்சில் படுத்துவதை நிறுத்த வேண்டும். முழு கொழுப்புச் சத்து உள்ள பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். பால் குளிர்ச்சியாக இருத்தல் அவசியம். பச்சினை பாலில் நனைத்து உதட்டில் வைக்கவும் குளிர்ச்சி குறைந்த பின் மறுபடியும் இதே போல் செய்ய வேண்டும் இவ்வாறு 10 நிமிடம் இப்படி செய்ய வேண்டும். நான்கு நாட்களுக்குப்பின் உதட்டில் மாற்றத்தைக்காண்பீர்கள்.
வெடித்த உதடுகளுக்கு
உதடு வெடிக்காமல் இருக்க ஈரப்பதம் தான் முக்கியம். அதிகளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்க வேண்டும். ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் குளிர்ந்த நீரை உதடுகளில் வைக்கலாம். குளிர்ந்த திரவங்களைவைத்து மசாஜ் செய்யுங்கள் 2-3 முறை செய்து வந்தாலே உதடு வெடிப்பு நின்று விடும்.