/indian-express-tamil/media/media_files/2025/04/19/r42FoXMJDLxiAuiCq3nc.jpg)
கோடை வெயிலின் தாக்கம் அனைத்து பகுதிகளில் தீவிரமாக இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த சூழலில் வீட்டில் ஏ.சி இருப்பவர்கள் தங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.
ஆனால், எல்லோரது வீட்டிலும் ஏ.சி இருக்கும் என்று கூற முடியாது. அதன்படி, ஏ.சி இல்லாதவர்கள் வீட்டில் மண்பானையை கொண்டு எளிமையான முறையில் ஏர் கூலர் செய்வது எப்படி என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்கான செயல்முறை சிம்பிளாக இருப்பதால் எல்லோராலும் சுலபமாக செய்ய முடியும்.
முதலில் ஒரு மண்பானையை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மண்பானையின் நடுப் பகுதியில் ஒரு கயிறு கொண்டு கட்ட வேண்டும். இந்தக் கயிறின் மேற்பகுதியில் பென்சில் கொண்டு கோடு போட வேண்டும். இவ்வாறு கோடு போட்ட பின்னர், அந்தக் கயிறை கழற்றிக் கொள்ளலாம்.
இந்தக் கோட்டின் மேலே ஒரு இன்ச் இடைவெளியில் பென்சில் கொண்டு குறித்துக் கொள்ள வேண்டும். இப்போது, தரையில் ஒரு துணி விரித்து அதன் மீது மண்பானையை வைத்து, முன்னர் குறித்து வைத்திருந்த இடங்களில் துவாரம் இட வேண்டும்.
இதையடுத்து, ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் மண்பானையை வைக்க வேண்டும். இப்போது, மண்பானையின் துவாரங்களுக்கு கீழே வரை அந்தப் பாத்திரத்தில் மணல் நிரப்பிக் கொள்ளலாம். இப்போது மண்பானையின் உள்ளே தண்ணீர் ஊற்றி, சுற்றி இருக்கும் மணலிலும் தண்ணீர் கொண்டு நனைக்க வேண்டும்.
இப்போது, ஒரு கூலர் ஃபேனை மண்பானையின் மேற்பகுதியில் வைத்து விடலாம். இந்த ஃபேன் மூலம் வெப்பமான காற்று உள்ளே சென்று, மண்பானையின் துவாரங்கள் வழியாக குளிர்ந்த காற்று வெளியேறும். இதன் மூலம் வீட்டிலேயே சூப்பரான ஏர் கூலரை ரெடி பண்ணலாம்.
நன்றி - Tamil Jailer Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.