பாம்பே சட்னி ….. 4 நாள் வச்சி சாப்பிட்டாலும் கெடாது!

சட்னி அரைக்க தேங்காய் இல்லை, பொட்டுக்கடலை இல்லை என புலம்ப வேண்டாம். உடனே இப்படி பாம்பே சட்னி நொடியில் செய்து அசத்திவிடுங்கள்.

aviyal recipe tamil chettinadu aviyal
aviyal recipe tamil chettinadu aviyal

சட்னி அரைக்க தேங்காய் இல்லை, பொட்டுக்கடலை இல்லை என புலம்ப வேண்டாம். உடனே இப்படி பாம்பே சட்னி நொடியில் செய்து அசத்திவிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 250 கிராம்
கடலை மாவு – 4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 50 மி.லி.
கடுகு, உளுத்தம் பருப்பு – 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 6
மஞ்சள்பொடி – 2 சிட்டிகை
இஞ்சி – 2 துண்டு
கறிவேப்பிலை, உப்பு – போதுமான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ருசிக்குத் தகுந்த அளவு உப்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றைப் போட்டுத் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போட வேண்டும். கடுகு வெடிக்கும் போது உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையைப் போட வேண்டும்.
உளுத்தம் பருப்பு சிவந்து வரும்போது வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்.

பின்னர் கரைத்து வைத்துள்ள கடலை மாவை அதில் ஊற்றி நன்கு கிளற வேண்டும். ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும்.

இந்த பாம்பே சட்னி பூரி, சப்பாத்தி, தோசை, இட்லி போன்றவற்றை தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to make bombay chutney recipe bombay chutney recipe

Next Story
’சீரியலுக்காக தளபதி படத்த மிஸ் பண்ணிட்டேனே’ காவ்யா அறிவுமணிTamil Serial News, Bharathi Kannamma Kaavya Arivumani
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com