சிக்கன் ரெசிபிக்களில் பட்டர் சிக்கன் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது.
இந்த ரெசிபி சிக்கனை சமைக்க சற்று பொறுமைத் தேவை. ஏனெனில் இந்த ரெசிபியில் சிக்கனை ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டியிருக்கும். ஆகவே பட்டர் சிக்கன் ரெசிபியை செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டீஸ்பூன்
கெட்டியான தயிர் - 1 கப்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
சிவப்பு தந்தூரி கலர் - 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 4 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
க்ரீம் - 1 கப் முந்திரி - சிறிது (பேஸ்ட் செய்து கொள்ளவும்)
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதில் தயிர் கலவையை ஊற்றி நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு மற்றும் சிவப்பு தந்தூரி கலர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் போட்டு, ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் வெண்ணெயை போட்டு, மிதமான தீயில் தக்காளியை வேக வைக்க வேண்டும். எண்ணெயானது தனியே பிரியும் போது, அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, க்ரீம், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். இறுதியில் அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி கிளறி, மூடி வைத்து 5-10 நிமிடம் வேக வைத்து இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்க வேண்டும்.
இப்போது சூப்பரான பட்டர் சிக்கன் ரெடி.