சப்பாத்தி மாவில் எண்ணெய் சேர்க்காமல் பிசைவது எப்படி என இந்தக் குறிப்பில் காணலாம். இவ்வாறு சப்பாத்தி மாவு தாயாரிப்பதன் மூலம் கைகளிலும் ஒட்டாது, எண்ணெய் இல்லாததால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மூன்று கப் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முள் கரண்டி கொண்டு நன்றாக கலந்து விட வேண்டும். அதன்பின்னர், கலந்து வைத்திருக்கும் கோதுமை மாவுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
தண்ணீர் சேர்த்த பின்னர் மீண்டும் முள் கரண்டி கொண்டு கோதுமை மாவை கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பாதி அளவு மாவு பிசைந்த பதத்திற்கு வந்து விடும். இதன் பின்னர், சிறிதளவு எண்ணெய்யை கைகளில் தேய்த்துக் கொண்டு சப்பாத்தி மாவை பிசைய வேண்டும்.
இவ்வாறு பிசைந்த பின்னர் எண்ணெய் சேர்க்காமல் சப்பாத்தி சுட்டு எடுக்கலாம். அதன்படி, நம் கைகளிலும் மாவு ஒட்டாது. எண்ணெய் சேர்க்காத ஆரோக்கியமான சப்பாத்தியும் தயாரித்து விடலாம்.