சிம்பிளா வைக்கலாம் இஞ்சி ரசம்: செம டேஸ்ட்

South Indian Recipe Food Recipes video Ginger Rasam : உடலுக்கு ஆரோக்கியம்  தரக்கூடிய  இஞ்சி ரசத்தை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

Immunity Booster Inji rasam Tamil video: இஞ்சி அற்புதமான உணவுப் பொருள் மட்டுமல்ல, அருமருந்தும் கூட! அஜீரணப் பிரச்னையை சரி செய்வதில் இஞ்சி முக்கியப் பங்கு வகிக்கும். இஞ்சி சாறாக பருகுவது ஒருபுறமிருக்க, இஞ்சியை ரசம் வைத்து சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

உடலுக்கு ஆரோக்கியம்  தரக்கூடிய  இஞ்சி ரசத்தை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

Ginger rasam Tamil Recipe video: இஞ்சி ரசம்
இஞ்சி ரசம் செய்யத் தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு – கால் கப், பூண்டு – 5 பல், மிளகு – 2 டீ ஸ்பூன், இஞ்சி – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு, சீரகம் – 1 ஸ்பூன், பெருங்காயத் தூள் – சிறிதளவு, எலுமிச்சை சாறு – சிறிதளவு, உப்பு – தேவைக்கு, கடுகு – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி தழை – சிறிதளவு, நல்லெண்ணெய் – தேவையான அளவு


இஞ்சி ரசம் செய்முறை :

துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் வடித்துக்கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும். அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத் தூள் சேர்க்க வேண்டும். மசாலா தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவுங்கள். பின்னர் இறக்கி பரிமாறவும். இப்போது இஞ்சி ரசம் ரெடி.

மாணவர்கள் கிரியேட்டிவிட்டி அதிகரிக்க புதிய வசதி: அண்ணா பல்கலை அசத்தல்

எல்லா விருந்துகளிலும் தவறாமல் இடம் பெறும் ரசம் தமிழகத்தில் மட்டுமில்லை தென்னிந்திய மக்களின் பொதுவான உணவு ஆகும். அதிலும் இஞ்சி ரசம் தென்னிந்திய மக்களின் விருப்பமான ஒன்றாகும்.

உதிரியான சாதம்: குக்கர் இல்லாமல் சமைப்பதில் என்ன நன்மைன்னு பாருங்க!

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to make ginger rasam south indian recipe easy tamil recipe rasam

Next Story
பப்பாளி இலை, பப்பாளி ஜுஸ்… இவ்ளோ நன்மையா? எப்படி சாப்பிடுவது?papaya leaves juice, papaya leaves juice health benefits, papaya leaves jice medical important, பப்பாளி, பப்பாளி இலையின் மருத்துவம், பப்பாளி இலை சாறு, பப்பாளி இலை ஜூஸ், papaya tree, how to make papaya leaves juice, பப்பாளி இலை ஜூஸின் மருத்துவப் பயன்கள், papaya juice drinks, papaya fruit, papaya juice, papaya tree, natural health benefits
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com