Food recipes in tamil: சப்பாத்தி மாவு பிசைய வேண்டும் என்றாலே பலருக்கு ரொம்ப கடினமானதுதான். மாவை பிசைந்து, பக்குவமாக உருட்டி, மறுபடியும் அதை தேய்த்து, சுட்டு எடுத்து என ரொம் லாங் பிராசஸ் தான். என்னதான் இதுக்கெல்லாம் மெஷின் வந்தாலும் அவை பெரிதாக ரீச் ஆகவில்லை. இதனாலே சிலர் சப்பாத்தி சாப்பிட பிடித்தாலும் அதை சமைப்பதில்லை. இனி உங்களுக்கு பிடித்த சப்பாத்தியை தவிர்க்கவேண்டாம். மாவு பிசையாமல் சுலபமாக இன்ஸ்டன்ட் சப்பாத்தி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு- 2 கப்
மைதா - 1 கப்
சர்க்கரை - 1 ஸ்பூன்
தண்ணீர் - 2 அரை கப்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
*கோதுமை மாவு, மைதா, ஒரு ஸ்பூன் எண்ணெய், சர்க்கரை, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்துககொள்ளுங்கள்
*பின் அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் கொஞ்சமாக எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள்.
*கல்லை மிதமான சூட்டில் வைத்து கெட்டியான ஒரு கரண்டி மாவை எடுத்து வட்டமாக கெட்டிப் பதத்தில் ஊற்றுங்கள்.
*மேற்புறம் மாவு முற்றிலும் கலர் மாறியதும் அதை திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு கரண்டியால் அழுத்தி விடுங்கள்.
*சுற்றிலும் சப்பாத்திக்கு அழுத்துவது போல் அழுத்த வேண்டும். பின் மறுபுறமும் திருப்பிப் போட்டு அழுத்த வேண்டும்.
*மிதமான தீயில் வைத்து மாறி மாறி திருப்பிப் போட சப்பாத்தி போல் உப்பி வரும்.
*நன்கு சப்பாத்தி பதத்திற்கு வந்ததும் எடுத்துவிடவும்.
இப்போ ஈஸியான இன்ஸ்டன்ட் சப்பாத்தி ரெடி..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"