பெண்கள் அதிகம் விரும்பும் மல்லிகை பூவை நாம் வீட்டிலேயே வைத்து பராமரிக்கலாம். வீட்டில தோட்டம் வைத்திருப்பவர்கள் அதை செடி வைத்து பராமரித்து அதில் இருந்து கிடைக்கும் பூக்களை தலையில் வைத்துக்கொள்வார்கள். ஆனால் தோட்டம் இல்லாதவர்கள் கடைகளில் விற்கும் பூவை வாங்கிக்கொள்வார்கள். அதே சமயம் தோட்டம் இருந்தாலும், அதிகமாக மல்லிகை பூ செடிகளை உண்டாக்குவதற்கு நர்சரி சென்று வாங்கி வரவேண்டிய நிலை இருக்கிறது.
Advertisment
ஆனால் வீ்ட்டில் ஒரு செடி இருந்தால் போதும் அதை வைத்தே ஒரு மல்லிகை பூ தொட்டத்தை உருவாக்கலாம். எப்படி தெரியுமா? டிசம்பவர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வீட்டில் இருக்கும் மல்லிகை செடி கிளைகள் அதிகம் வைக்கும். அந்தமாதிரியான கிளைகளை வைத்து ஒரு பெரிய தோட்டத்தை உருவாக்கலாம். இந்த கிளைகள் பென்சில் அளவுக்கு தடிமனாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் பச்சை நிறத்தில் இருந்தால் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும்.
பென்சில் போல் தடினமாக உள்ள கிளைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, அனைத்து குச்சிகளின் முனையிலும் நன்றாக சீவி விட்டு, அதில் இருக்கும் இலைகளை பாதியாக கட் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பக்கெட்டில், தோட்டத்து மண், இயற்கை உரம் கோகோபை சமஅளவு சேர்த்து, எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு வெங்காயத்தை எதிர்த்து ஒரு வெங்காயத்தை எடுத்து அதில், மல்லிகை குச்சிகளை சொருக்கி, அதன்பிறகு நனைத்து மண்ணில் சொருகி வைக்கவும்.
அதன்பிறகு அந்த மண்ணில் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவை கவிழ்த்து விடவும். ஒரு வாரம் கழித்து எடுத்து பார்த்தால் மல்லிகை குச்சிகள் துளிர் விட்டிருக்கும். இந்த பக்கெட் வெயில் மற்றும் நிழல் இருக்கும் இடங்களில் வைக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் நமது வீட்டிலேயே பெரிய மல்லிகை தோட்டத்தை உருவாக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“