வெயில் காலம் வந்தாச்சு... ஒரு வருசத்துக்கு தேவையான 'வத்தல்' இப்படி ரெடி பண்ணுங்க!
வெயில் காலத்தில் ஒரு ஆண்டுக்கு தேவையான வத்தல் செய்வது எப்படி என்று பார்ப்போம். இந்த கத்தரிக்காய் வத்தலைக் கொண்டு, புளிக் குழம்பு, வத்தக்குழம்பு செய்யலாம். அப்படியே பொரித்தும் சாப்பிடலாம். ரொம்ப சுவையாக இருக்கும்.
வெயில் காலத்தில் ஒரு ஆண்டுக்கு தேவையான வத்தல் செய்வது எப்படி என்று பார்ப்போம். இந்த கத்தரிக்காய் வத்தலைக் கொண்டு, புளிக் குழம்பு, வத்தக்குழம்பு செய்யலாம். அப்படியே பொரித்தும் சாப்பிடலாம். ரொம்ப சுவையாக இருக்கும்.
வெயில் காலத்தில் ஒரு ஆண்டுக்கு தேவையான வத்தல் செய்வது எப்படி என்று பார்ப்போம். Image Screengrab from YouTueb @Dhana's Green Life
வெயில் காலம் தொடங்கிவிட்டது என்றாலே வீடுகளில் இல்லத்தரசிகள், சில மாதங்களுக்கு தேவையான பல்வேறு விதமான வத்தல்களை தயார் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள். அந்த வகையில், வெயில் காலத்தில் ஒரு ஆண்டுக்கு தேவையான வத்தல் செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
Advertisment
வெயில் காலத்தில் கத்தரிக்காய் வத்தல் தயார் செய்து வைத்துக்கொண்டால் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தலாம். தனாஸ் கிரீன் லைஃப் (Dhana's Green Life) யூடியூப் சேனலில் கத்தரிக்காய் வத்தல் எப்படி செய்வது என்று காட்டியுள்ளனர். அதன்படி கத்தரிக்காய் வத்தல் செய்து பார்ப்போம். முதலில் 4 கிலோ நல்ல கத்தரிக்காய் வாங்கிக்கொள்ளுங்கள். நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். 2 பெரிய அளவிலான போனி பாத்திரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
ஒரு கத்தரிக்காயை 4 பெரிய துண்டுகளாக வெட்டி போனியில் போடுங்கள். அதே போல எல்லா கத்தரிக்காய்களையும் பெரிய துண்டுகளாக வெட்டிப் போடுங்கள். பின்னர், 2 ஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு மஞ்சள் தண்ணீரிலேயே 2 நிமிடம் ஊற வையுங்கள். பிறகு, அதே மஞ்சள் தண்ணீரிலேயே நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த கத்தரிக்காய்களை ஒரு நாள் முழுவதும் வெயிலில் சுத்தமான இடத்தில் காய வையுங்கள். கத்தரிக்காய் லேசாக சுருங்கி இருக்கும்.
Advertisment
Advertisements
கத்தரிக்காயை வேக வைக்க வேண்டும். அதற்கு ஒரு அகலமான பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் காய வைத்த கத்தரிக்காயைப் போடுங்கள். அதில் 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் போடுங்கள். மிளகாய் தூள் 2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு ஒரு கைப்பிடி அளவுக்கு போடுங்கள். 2 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். நன்றாகக் குலுக்கு விடுங்கள்.
இப்போது ஸ்டவ் ஆன் செய்து அடுப்பில் வையுங்கள். ஒரு மூடி போட்டு வேக வையுங்கள். 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு முறை மூடியைத் திறந்து கத்தரிக்காயை நன்றாகக் குலுக்கு விடுங்கள். அப்போதுதான் கத்தரிக்காய் குழியாமல் இருக்கும். இப்படி ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒருமுறை என 4 முறை குலுக்கி விடுங்கள். 20 நிமிடத்தில் கத்தரிக்காய் நன்றாக வெந்திருக்கும். கத்தரிக்காயை தண்ணீர் இல்லாமல் வெளியே எடுத்து ஒரு ட்ரேவில் பரப்பி 3 நாள் நன்றாகக் காய வையுங்கள். இதை காற்று புகாத ஒரு கண்டெய்னரில் போட்டு பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த கத்தரிக்காய் வத்தலைக் கொண்டு, புளிக் குழம்பு, நல்ல காரக்குழம்பு செய்யலாம், வத்தக்குழம்பு செய்யலாம். அப்படியே பொரித்தும் சாப்பிடலாம். ரொம்ப சுவையாக இருக்கும். உங்கள் வீட்டிலும் இந்த கத்தரிக்காய் வத்தலை செய்து பாருங்கள்.