சப்பாத்தி வட இந்திய உணவாக இருந்தாலும் அது தென்னிந்திய தினசரி உணவுகளில் ஒன்றாகிவிட்டது. சுவையான, ஆரோக்கியமான உணவாக இருந்தால், எந்த நாட்டினமும் எந்த மக்களும் அதை சாப்பிடுவார்கள்.
சப்பாத்தி பலருக்கும் பிடித்தமான உணவு, ஆனால், சப்பாத்தி செய்வதுதான் சிரமம். மாவு பிசைந்து, தனித்தனி உருண்டையாக உருட்டி, ஒரு ஒரு சப்பாத்தியாகத் தேய்த்து, தவாவில் சுட்டு எடுப்பதற்குள் செய்பவர்கள் சோரந்துபோய்விடுவார்கள். ஆனால், ஒரு புது டிப்ஸ்ங்க, நீங்க சப்பாத்திக்கு மாவு பிசைந்த பிறகு, உருண்டை உருட்டி, ஒரே நேரத்தில் 3 சப்பாத்தி தேய்க்கலாம், அப்படியே தவாவில், ஒரே நேரத்தில் 3 சப்பாத்தி சுடலாம். மொத்தம் மொத்தமா சப்பாத்தி சுடலாம். நேரமும் மிச்சம், கேஸ் செலவும் கம்மி ஆகும். அது எப்படி என்று பார்க்கலாம்.
நீங்கள் வழக்கம் போல, சப்பாத்தி மாவு பிசைந்துகொள்ளுங்கள். ஒரே மாதிரியான அளவில் உருண்டையாக உருட்டிக்கொள்ளுங்கள். முதலில் சப்பாத்தி தேய்க்கும் பலகையில், மாவு போட்டு பரப்பிக் கொள்ளுங்கள். ஒரு உருண்டையை எடுத்து வைத்து கைகளால் அழுத்திக் கொள்ளுங்கள், அதன் மீது லேசாக எண்ணெய் விட்டு, சப்பாத்தி உதிரி மாவு போட்டு நன்றாக தடவி விடுங்கள். அதையும் கைகளால் அழுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் கட்டையில் லேசாக எண்ணெய் விட்டு, சப்பாத்தி உதிரி மாவு போட்டு நன்றாக தடவி விடுங்கள். அதையும் கைகளால் அழுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் கட்டையில் லேசாக எண்ணெய் விட்டு, சப்பாத்தி உதிரி மாவு போட்டு நன்றாக தடவி விடுங்கள். அதையும் கைகளால் அழுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் கட்டையில் லேசாக எண்ணெய் விட்டு, சப்பாத்தி உதிரி மாவு போட்டு நன்றாக தடவி விடுங்கள். இப்போது சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் அழுத்தம் கொடுக்காமல் தேயுங்கள். இப்போது அதை கைகளில் எடுத்து தனித்தனியாக மெதுவாக கிழியாமல் பிரித்து எடுங்கள்.
அடுத்து சப்பாத்தி சுட வேண்டும். முதலில் ஸ்டவ்வை மிதமான தீயில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சப்பாத்தியைத் தவாவில் போடுங்கள் லேசாக வெந்த உடன் அதாவது லேசாக மாவாக இருக்கும்போதே திருப்பி போடுங்கள். மீண்டும் திருப்பி போடுங்கள். அதன் மீது ஒரு சப்பாத்தியைப் போட்டு, 2 வினாடிகளில் திருப்பி போடுங்கள், இப்போது, மேலே இருக்கும் சப்பாத்தியைத் திருப்பி போடுங்கள், இப்போது அதன் மீது ஒரு சப்பாத்தியைப் போடுங்கள். லேசாக வெந்ததும் அப்படியே திருப்பிப் போடுங்கள். இப்போது மேலே இருக்கும் சப்பாத்தியைத் திருப்பிப் போடுங்கள், மீண்டும் மொத்தமாகத் சப்பாத்தியைத் திருப்பிப் போடுங்கள். கடைசியாக உங்களுக்கு தேவையென்றால், எண்ணெய் விட்டு திருப்பி போடலாம், இப்படி திருப்பி போடும்போது, எல்லா சப்பாத்தியும் வெந்து இருக்கும். இப்படி செய்தால், சப்பாத்தியை மொத்த மொத்தமாக சுடலாம். நேரமும் மிச்சமாகும். கேஸ் செலவும் கம்மியாகும். நளினி மாணிக் குக்கிங் யூடியூப் சேனலில் கூறியிருக்கும் இந்த டிப்ஸ் புதுசா இருக்கு இல்லையா, உங்கள் வீட்டில் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.